தவறை ஒப்புக்கொண்ட வாட்சன்.. புள்ளிப்பட்டியலில் முன்னேறுமா சிஎஸ்கே!Watson opens up about his poor performance as openner

ஐபிஎல் 2020 தொடரில் தனது 5 ஆவது ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியுடன் மோதுகிறது. இதற்கு முன்னதாக 4 போட்டிகளில் விளையாடியுள்ள இரண்டு அணிகளும் தலா ஒரு போட்டியில் மட்டுமே வென்று புள்ளிப்பட்டியலில் கடைசி இரண்டு இடங்களில் உள்ளன.

முதல் போட்டியில் மும்பை அணியை வீழ்த்திய சென்னை அணி அடுத்த 3 போட்டிகளில் தொடர் தோல்வியை சந்தித்தது. இதனால் இன்றைய போட்டியில் பஞ்சாப் அணியை வீழ்த்த வேண்டிய கட்டாயத்தில் சென்னை அணி உள்ளது.

watson

இந்நிலையில் நான்கு போட்டிகளிலும் சரியாக பேட்டிங் செய்யாத சென்னை அணியின் துவக்க ஆட்டக்காரர் வாட்சன் தான் செய்யும் தவறுகளை ஒப்புக்கொண்டுள்ளார். இதுகுறித்து பேசியுள்ள அவர் துவக்க ஆட்டக்காரராக நான் சரியாக விளையாடாததால் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் அதிக நெருக்கடிக்கு ஆளாகின்றனர்.

துவக்கம் சரியாக அமையாததால் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் தங்கள் இலக்கை இலகுவாக எட்டிப்பிடிக்க முடியவில்லை. இந்த போக்கை மாற்றினால் தான் எங்களால் வெற்றிபெற முடியும் என வாட்சன் தெரிவித்துள்ளார்.