கடந்த போட்டியில் சென்னை அணி வெற்றிபெற்றிந்தாலும் மிகவும் கவலையை ஏற்படுத்திய அந்த 2 வீரர்கள்!



Watson and Raidu poor performance against to Hyderabad team

நேற்று முன்தினம் சென்னை மற்றும் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற்ற போட்டியில் சென்னை அணி வெற்றிபெற்றிருந்தாலும் அந்த ஒரு சம்பவம் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை மற்றும் ஹைதராபாத் அணிகள் மோதிய கடைசி ஆட்டத்தில் சென்னை அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி முதல் முறையாக சாம் கரணை ஓப்பனிங் இறங்கவைத்து அதிர்ச்சி கொடுத்தது. சாம்கரனும் அணி தன் மீது வைத்த நம்பிக்கையை காப்பாற்றும்விதமாக அதிரடியாக ஆடி ரன்களை குவித்தார்.

csk

மறுபக்கம் டுப்ளசிஸ் அதிரடியாக விளையாடுவர் என நினைத்தால், அவர் முதல் பந்தியிலையே ஆட்டம் இழந்து வெளியேறியது அனைவர்க்கும் அதிர்ச்சியை கொடுத்தது. இதனை அடுத்து சாம் கரண், வாட்சன் இருவரும் ஜோடி சேர்ந்து அதிரடியாக ஆட்டத்தை தொடங்கியபோது சாம் கரண் ஆட்டம் இழந்து வெளியேறினார்.

இந்நிலையில்தான் வாட்சன் மற்றும் ராய்டு இருவரும் ஜோடி சேர்ந்தனர். இவர்கள் இருவரும் ஆடிய விதம்தான் சற்று கவலையை ஏற்படுத்தியுள்ளது. 38 பந்துகளை பிடித்த வாட்சன் 42 ரன்களும், 34 பந்துகளை பிடித்த ராய்டு 41 ரன்கள் மட்டுமே எடுத்தனர். இருவரின் எண்ணிக்கையும் அதிகமாக தெரிந்தாலும் அவர்கள் எதிர்கொண்ட பந்துகளின் எண்ணிக்கை மிக மிக அதிகம்.

csk

இருவரும் ஒருநாள் போட்டியில் விளையாடுவதுபோல் பந்துக்கு பந்து ரன் எடுக்க மட்டுமே முயற்சி செய்தனர். இருவரும் சற்று அதிரடியாக ஆடி இருந்தால் சென்னை அணியின் ரன் எண்ணிக்கை மேலும் சற்று உயர்ந்திருக்கும். எதிர் அணியான ஹைதராபாத் அணியின் பேட்டிங் ஆர்டர் அன்று சரியில்லை என்பதால் சென்னை அணி இந்த எளிதான இலக்குடன் வெற்றிபெற்ற முடிந்தது.

அதுவே டெல்லி அல்லது மும்பை அணியாக இருந்திருந்தால் 168 என்ற எளிதான இலக்கை மிக எளிதாக கடந்து வெற்றி பெற்றிருக்க அதிக வாய்ப்பு உள்ளது. எனவே சென்னை அணி மிடில் ஆர்டரில் மேலும் கவனம் செலுத்தினால் மட்டுமே இனிவரும் போட்டிகளில் வெற்றிபெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறமுடியும்.