இந்தியா விளையாட்டு

நேற்று நடந்த ஒரே ஆட்டத்தின் மூலம் பல சாதனைகளை படைத்த டேவிட் வார்னர்.!

Summary:

14-வது ஐ.பி.எல். தொடரின் 23வது லீக் ஆட்டம் நேற்று டெல்லியில் நடைபெற்றது. நேற்றைய ஆட்டத்தில

14-வது ஐ.பி.எல். தொடரின் 23வது லீக் ஆட்டம் நேற்று டெல்லியில் நடைபெற்றது. நேற்றைய ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஒவர்களில் 3 விக்கெட்டுள் இழப்பிற்கு 171 ரன்கள் எடுத்தது. இதனைத்தொடர்ந்து 172 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி18.3 ஒவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 173 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

நேற்றைய போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் கேப்டன் டேவிட் வார்னர் பல சாதனைகளை படைத்துள்ளார். அவர் தனது 148 வது ஐ.பி.எல். போட்டியில் விளையாடி ஐ.பி.எல்.லில் 50 அரை சதங்கள் அடித்த முதல் வீரர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார். டி20 கிரிக்கெட்டில் 10 ஆயிரம் ரன்களையும் அவர் கடந்துள்ளார்.  நேற்றைய போட்டியில் விளையாடுவதற்கு முன் இந்த சாதனையை புரிவதற்கு அவருக்கு 40 ரன்கள் தேவைப்பட்டது.

வார்னருக்கு அடுத்தபடியாக அதிக அரை சதங்கள் அடித்த எண்ணிக்கையில் டெல்லி அணியின் ஷிகர் தவான் (43) 2வது இடத்திலும், பெங்களூரு அணி கேப்டன் விராட் கோலி (40) 3வது இடத்திலும் உள்ளனர். நேற்றைய போட்டியில் அவர் அடித்த 2 சிக்சர்கள் மூலம் ஐ.பி.எல்.லில் 200 சிக்சர்களை அவர் விளாசியுள்ளார். இதன்மூலம் 200க்கு மேற்பட்ட சிக்சர்களை அடித்த வீரர்களின் வரிசையில் 8வது இடத்தில் வார்னர் உள்ளார்.


Advertisement