இந்தியா விளையாட்டு

விராட்கோலி மிகவும் பயப்படுகிறார் ரோகித்சர்மாவிற்கு!. விமர்சிக்கும் ரசிகர்கள்!.

Summary:

விராட்கோலி மிகவும் பயப்படுகிறார் ரோகித்சர்மாவிற்கு!. விமர்சிக்கும் ரசிகர்கள்!.


இந்திய அணியின் துவக்க ஆட்டக்காரரான ரோகித் சர்மாவைக் கண்டு விராட்கோலி  பயப்படுவதன் காரணமாகவே விராட்கோலி  அவரை டெஸ்ட் போட்டியில் எடுக்க மறுக்கிறார், அவரை ஓரங்கட்டி வருகிறார் என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

இந்திய அணியின் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் ரோகித் சர்மா, டெஸ்ட் போட்டிகளில் அந்தளவிற்கு ஆட்டத்தை வெளிப்படுத்துவதில்லை. இதனால் இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.

கடந்த 2013-ஆம் ஆண்டு மேற்கிந்திய தீவு அணிக்கு எதிரான  முதல் இரண்டு போட்டிகளிலும் மிடில் ஆர்டரில் இறங்கி சதமடித்தார் ரோஹித் சர்மா. அதன்பிறகு 23 போட்டிகளில் ஆடி ஒரு சதம் மட்டுமே அடித்துள்ளார். மொத்தமாக இந்திய அணிக்காக 25 டெஸ்ட் போட்டிகளில் ஆடி, 3 சதங்கள், 9 அரைசதங்களுடன் 1479 ஓட்டங்கள் அடித்துள்ளார்.

இந்த ஆண்டின் துவக்கத்தில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் தான் ரோகித் சர்மா ஆடினார். அதன் பின் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஒரு டெஸ்ட் போட்டியிலும் ரோஹித்திற்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை.


தற்போது நடைபெற்று வரும் இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் மூன்று டெஸ்ட் போட்டிகளில் துவக்க வீரர்கள் அந்தளவிற்கு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தாத காரணத்தினால், நான்காவது, ஐந்தாவது போட்டியில் ரோகித்திற்கு இடம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ரோகித்திற்கு அணியில் இடம் கிடைக்காததால், அவரது ரசிகர்கள், ரோஹித்திற்கு தொடர்ந்து அணியில் இடம் மறுக்கப்படுவதற்கு விராட்கோலி  தான் காரணம் என்றும் ரோஹித்தை கண்டு விராட்கோலி  பயப்படுவதாகவும் ரசிகர்கள் விமர்சித்துவருகின்றனர்.


Advertisement