போட்டியின் போது சிறப்பாக ஆடிய தமிழக வீரரை தமிழில் பாராட்டிய விராட்! வேற லெவல் வீடியோ.!

இரண்டாவது டெஸ்ட் போட்டியில் கோலி, அஸ்வினை தமிழில் உற்சாகப்படுத்திய வீடியோ வைரலாகி வருகிறது.


virat-talking-in-tamil

இங்கிலாந்து அணி இந்தியாவுக்குச் சுற்றுப்பயணம் செய்து 4 டெஸ்டுகள், 5 டி20, 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடவுள்ளது. அதில் முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகள் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து வெற்றி பெற்ற நிலையில், இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஆரம்பத்தில் இருந்தே ஆதிக்கம் செலுத்தி வந்த இந்திய அணி, 317 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இரண்டாவது டெஸ்ட் போட்டியில் தமிழக வீரர் அஸ்வின் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். முதல் இன்னிங்ஸில் 5 விக்கெட் வீழ்த்திய அஸ்வின் இரண்டாவது இன்னிங்ஸில் சதம் அடித்து இந்திய அணியின் வெற்றிக்கு பெரிதும் காரணமாக விளங்கினார்.

இரண்டாவது டெஸ்ட் போட்டியில் அஸ்வினின் பந்து வீச்சை, இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, தமிழில் பாராட்டி உற்சாகப்படுத்தியுள்ளார். அந்த போட்டியில் அஸ்வின் இங்கிலாந்து வீரர் ஸ்டோக்ஸிற்கு பந்து வீசியபோது பேட்ஸ்மேனால் ரன் ஏதும் எடுக்கமுடியவில்லை. அப்போது விராட் கோலி இது வெறலெவல் பவுலிங் என்று தமிழில் பேசி உற்சாகப்படுத்தினார். இந்த வீடியோ தற்போது சமூகவலைத்தங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.