எனக்கு விஸ்வாசம் ரொம்ப முக்கியம்.! தோல்விக்கு பின் மனம்திறந்த விராட் கோலி.! என்ன கூறியுள்ளார் பார்த்தீர்களா.?

எனக்கு விஸ்வாசம் ரொம்ப முக்கியம்.! தோல்விக்கு பின் மனம்திறந்த விராட் கோலி.! என்ன கூறியுள்ளார் பார்த்தீர்களா.?


virat talk about RCB team

ஐ.பி.எல். தொடரில் நேற்று நடைபெற்ற எலிமினேட்டர் சுற்றில் புள்ளிப்பட்டியலில் 3-வது, 4-வது இடங்களை பிடித்த அணிகளான பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதியது. நேற்றைய ஆட்டத்தில் டாஸ் வென்ற பெங்களூரு அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இறுதியில் பெங்களூரு அணி 20  ஓவர்கள்  முடிவில்  7 விக்கெட் இழப்புக்கு 138 ரன்கள் மட்டுமே எடுத்தது. 

இதனையடுத்து139 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கொல்கத்தா அணி பேட்டிங் செய்தது. இறுதியில் கொல்கத்தா அணி 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 139 ரன்கள் எடுத்து 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த தோல்வியின் மூலம் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி ஐ.பி.எல். தொடரை விட்டு வெளியேறியது.

இந்நிலையில், தோல்விக்கு பின் பேசிய பெங்களூரு அணி கேப்டன் விராட் கோலி, தான் இளைஞர்கள் சுதந்திரத்துடன் ஆடும் சூழலை ஏற்படுத்த என்னால் முடிந்ததை செய்திருக்கிறேன். இந்திய அணியிலும் இதையே செய்திருக்கிறேன். என்னுடைய தலைமைக்கு என்ன மாதிரியான வரவேற்பு இருந்தது என்பது தெரியவில்லை. ஆனால், நான் என்னுடைய 120 சதவீதத்தை பெங்களூரு அணிக்காக கொடுத்திருக்கிறேன்.

ஒரு வீரராக தொடர்ந்து பெங்களூரு அணிக்கு விளையாடுவேன். என்னை பொறுத்தவரை விஸ்வாசம் என்பது மிகவும் முக்கியம், நான் கடைசியாக ஐபிஎல் விளையாடும் வரை பெங்களூரு அணிக்கு தான் விளையாடுவேன். வேறு எந்த அணிக்கும் ஆடமாட்டேன் என்று விராட் கோலி கூறியுள்ளார்.