விளையாட்டு

விராட்கோலி செய்த ஒற்றை காரியம்.! விரைவில் ஐசிசி தடை விதிக்க வாய்ப்பு.! அதிர்ச்சியில் ரசிகர்கள்.!

Summary:

Virat kohli send williamson may attract ICC action

நியூசிலாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி T20 போட்டிகளை தவிர ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் தொடர்ந்து தோல்வியடைந்து இந்திய ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது. இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் தோல்வியடைந்த நிலையில் 8 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய அணி ஒயிட் வாஷ் ஆகியுள்ளது.

இந்நிலையில் இரண்டாவது டெஸ்ட் போட்டியில், நியூசிலாந்து அணியின் கேப்டன் வில்லியம்சன் ஆட்டம் இழந்து வெளியேறும்போது இந்திய அணியின் கேப்டன் விராட்கோலி  ஆக்ரோஷமாக நடந்துகொண்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

பும்ராவின் பந்துவீச்சில் கனே வில்லியம்சன்(3) ரன்களில் ரிஷப் பண்டிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். இதைக்கண்ட கோலி கத்தி, கூச்சல் போட்டு கொண்டாடினார். மேலும் வில்லியம்சன் வெளியேறும்போது வாயில் விரல் வைத்தும் அவரை வழியனுப்பி வைத்தார் விராட்கோலி.

இந்நிலையில் எதிரணி வீரர் ஆட்டம் இழந்து வெளியேறும்போது அதை ஆக்ரோஷமாக கொண்டாடும் வீரருக்கு ஐசிசி தடை விதிக்க தொடங்கியுள்ள நிலையில், விராட்கோலி தொடர்ந்து இதுபோன்று நடந்துகொள்வதால் விராட்கோலிக்கு ஐசிசி தடை விதிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.


Advertisement