புஷ்பா 2 எப்படி? புளூ சட்டை மாறன் விமர்சனம் இதோ.. பாராட்டு., பன்ச்.. என்டில் ட்விஸ்ட்.!
#Breaking: தனிப்பட்ட காரணங்களால் முதல் 2 டெஸ்ட் தொடரில் இருந்து விலகிய விராட்; காரணம் என்ன?..!
இந்திய கிரிக்கெட் அணியின் முக்கிய நட்சத்திர ஆட்டக்காரராக விராட் கோலி, ஜனவரி 25ம் தேதி ஹைதராபாத்தில் தொடங்கவுள்ள இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதிக்கொள்ளும் டெஸ்ட் தொடரில் விளையாடுவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது.
இதற்காக இந்திய கிரிக்கெட் அணியும், இங்கிலாந்து கிரிக்கெட் அணியும் ஹைதராபாத் மைதானத்தில் தீவிர களப்பயிற்சி எடுத்து வருகிறது. இந்நிலையில், முதல் 2 டெஸ்ட் தொடரில் இருந்து விராட் கோலி விலகினார்.
இதுகுறித்து பிசிசிஐ நிர்வாகம் தெரிவித்துள்ள தகவலின்படி, விராட் கோலி தனிப்பட்ட காரணங்களால் இங்கிலாந்துக்கு எதிரான முதல் 2 டெஸ்ட் தொடர்களில் விளையாடமாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ரோஹித் சர்மா வழிநடத்தும் இந்திய அணியில் எஸ்.கில், ஜெய்ஸ்வால், ஷ்ரேயஸ் ஐயர், கேஎல் ராகுல், கேஎஸ்.பரத், அஷ்வின், ஜடேஜா, அக்ஸர் படேல், குல்தீப் யாதவ், துருவ் ஜூரல், முகமது ஆகியோர் இடம்பெற்று இருக்கின்றனர்..
விராட் கோலி போட்டியில் இருந்து விலகியதற்கான காரணம் என்ன என்பது குறித்த தகவல்கள் இல்லை.