விளையாட்டு

அந்த வெறி கண்ணுல தெரியுது..!! மனுஷன் ரெஸ்டே எடுக்க மாட்டாரா..!! அடுத்த அதிரடிக்கு தயாராகும் விராட்கோலி..

Summary:

இந்தியா - இங்கிலாந்து தொடர் முடிவுபெற்றநிலையில் விராட்கோலி ஐபில் போட்டிக்கு தயாராகும் வீடி

இந்தியா - இங்கிலாந்து தொடர் முடிவுபெற்றநிலையில் விராட்கோலி ஐபில் போட்டிக்கு தயாராகும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகிவருகிறது.

இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதிய கடைசி ஒருநாள் போட்டியில் இந்திய அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று தொடரை கைப்பற்றியது. இந்நிலையில் அடுத்த மாதம் தொடங்க இருக்கும் ஐபில் போட்டியை முன்னிட்டு அனைத்து வீரர்களும் தற்போதில் இருந்தே தயாராகிவருகின்றனர்.

ஐபில் போட்டியில் பெங்களூரு அணிக்காக விளையாடிவரும் இந்திய அணியின் கேப்டன் விராட்கோலி, ஒருநாள் போட்டி முடிந்த கையோடு தற்போது ஐபில் தொடருக்கான பயிற்சியை தொடங்கிவிட்டார். "ஓய்வெடுக்க நேரம் இல்லை" என பதிவிட்டு, உடற்பயிற்சி செய்யும் வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளார் விராட்கோலி.

இந்த வீடியோவை பார்த்த பெங்களூரு அணியின் மற்றொரு அதிரடி வீரரான ஏ.பி.டிவில்லியர்ஸ் பயணத்திற்கு கிளம்புவது போல் ஒரு புகைப்படத்தை வெளியிட்டு நானும் கிளம்பிவிட்டேன், அணியில் வந்து இணைகிறேன் என பதிவிட்டுள்ளார்.

இதனை பார்த்த ரசிகர்கள், விரைவில் ஐபில் போட்டி மூலம் மற்றொரு கிரிக்கெட் திருவிழாவை காண காத்திருப்பதாக கமெண்ட் பதிவிடுவருகின்றனர். இதுவரை ஒருமுறை கூட ஐபில் கோப்பையை கைப்பற்றாத பெங்களூரு அணி, இந்த முறை எப்படியும் கோப்பையை வென்றே ஆகவேண்டும் என்ற முனைப்புடன் களமிறங்க உள்ளது.


Advertisement