விளையாட்டு

முன்பெல்லாம் எதெற்கெடுத்தாலும் கோபப்படும் கோலி இப்போ இப்டி மாறிட்டாரே..! சக வீரர்களை விழுந்து விழுந்து சிரிக்கவைத்த விராட்.! வைரல் வீடியோ

Summary:

முன்பெல்லாம் எதெற்கெடுத்தாலும் கோபப்படும் கோலி இப்போ இப்டி மாறிட்டாரே..! சக வீரர்களை விழுந்து விழுந்து சிரிக்கவைத்த விராட்.! வைரல் வீடியோ

இந்தியா வந்துள்ள இலங்கை அணி இந்திய அணியுடன் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றது. நடந்து முடிந்த இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் இந்திய அணி சிறப்பாக ஆடி அபார வெற்றி பெற்று டெஸ்ட் தொடரை இந்தியா 2-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றியது. 

இந்தநிலையில் பெங்களூருவில் உள்ள சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் இந்தியா - இலங்கை அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் போட்டியின் நடுவே இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர் பும்ரா போல் விராட் கோலி நகைச்சுவையாக பவுலிங் செய்து நடித்து காண்பித்தார். 

இதனைப் பார்த்து அருகில் இருந்த சக இந்திய வீரர்கள் விழுந்து விழுந்து சிரித்தனர். அப்போது பும்ராவும் சிரித்துக்கொண்டே அருகிலேயே இருந்தார். முன்பெல்லாம் விராட் கோலி ஆட்டத்தின்போது சில நேரத்தில் அதிகமாக கோபப்படுவார். ஆனால் தற்போது தன்னுடன் விளையாடும் சக வீரர்களை உற்சாகமாக வைத்துக்கொண்டுள்ளார். இந்த வீடியோவை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர். 


Advertisement