விராட் கோலிக்கு தல தோனி மீது இவ்வளவு வெறியா...! வீடியோவை பார்த்து விமர்சிக்கும் ரசிகர்கள்.!

விராட் கோலிக்கு தல தோனி மீது இவ்வளவு வெறியா...! வீடியோவை பார்த்து விமர்சிக்கும் ரசிகர்கள்.!


virat celebrate msd wicket

15வது ஐபிஎல் சீசனில் நேற்று முன்தினம் நடைபெற்ற ஆட்டத்தில் பெங்களூரு அணியும், சென்னை அணியும் மோதியது. அந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு173  ரன்கள் எடுத்தது. இதனை தொடர்ந்து 174 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சென்னை அணிக்கு கடைசி 2 ஓவர்களில் 39 ரன்கள் தேவைப்பட்டது.

அப்போது சென்னை அணித்தலைவர் தோனி களத்தில் இருந்தார். அவர் சிறந்த கேம் சேஞ்சர் என்பதால் சென்னை அணி ரசிகர்கள் நம்பிக்கையுடன் இருந்தனர். ஆனால் தோனி 2 ரன்கள் எடுத்தநிலையில் ஆட்டமிழந்தார். இறுதியில் சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 160 ரன்கள் எடுத்து தோல்வி அடைந்தது.  


அந்த ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தலைவர் தோனி வெறும் 2 ரன்களுக்கு ஹஸில்வுட் பந்துவீச்சில் கேட்ச் ஆகி அவுட்டானார். அப்போது பீல்டிங்கில் இருந்து ஆர்.சி.பி அணி வீரர் விராட் கோலி வெறித்தனமாக கத்தியபடி தோனி அவுட்டானத்தை கொண்டாடினார். இந்த விடியோவை பார்த்த ரசிகர்கள் தோனி மீது இவ்வளவு வெறியா.? என கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.