IPL2020: முதலிடத்திற்கும் கடைசி இடத்திற்கும் போட்டி.. முன்னேறும் சன்ரைசர்ஸ்!



Sunrises vs Delhi 11th ipl math

ஐபிஎல் 2020  டி20 தொடரின் 11 ஆவது போட்டியில் இன்று டெல்லி கேப்பிடஸ் அணியும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மோதுகின்றன. டாஸ் வென்ற டெல்லி அணியின் கேப்டன் ஸ்ரேயஸ் ஐயர் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார்.

இதுவரை இரு அணிகளும் தலா இரண்டு போட்டிகளில் விளையாடியுள்ளன. அதில் டெல்லி அணி இரண்டு போட்டிகளிலும் வெற்றிபெற்று புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. அதற்கு எதிர்மாறாக சன்ரைசர்ஸ் அணி இரண்டு போட்டிகளிலும் தோல்வியடைந்து கடைசி இடத்தில் உள்ளது.

இந்த ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் அணி மட்டும் தான் இதுவரை எந்த வெற்றியையும் பெறவில்லை. இன்றைய ஆட்டத்தில் முதல்முறையாக வில்லியம்சன் களமிறங்குகிறார். இன்றாவது சன்ரைசர்ஸ் வெற்றி பெறுமா என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.