எளிதாக வெற்றிபெறவேண்டிய ஆட்டம்!! சன்ரைசர்ஸ்க்கு டைட் கொடுத்த டெல்லி அணி!

எளிதாக வெற்றிபெறவேண்டிய ஆட்டம்!! சன்ரைசர்ஸ்க்கு டைட் கொடுத்த டெல்லி அணி!



Sunrisers Hyderabad won the match


ஐபிஎல் சீசன் 12 தற்போது நடைபெற்று வருகிறது. 2019 ஐபிஎல் தொடரின் 16வது லீக் போட்டியில் சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணியும் , டெல்லி கேபிடல்ஸ் அணியும் மோதுகிறது. இந்த போட்டியானது டெல்லி பெரோஷா கோட்லா ஸ்டேடியத்தில் நடைபெற்று வருகிறது. 

இந்த போட்டியில் ‘டாஸ்’ வென்ற ஐதராபாத் அணி கேப்டன் புவனேஷ் குமார் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். டெல்லி அணியின் துவக்க நாயகர்களாக களமிறங்கிய பிரிதிவ் ஷா, ஷிகர் தவான் சொற்ப ரன்களில் வெளியேறினர்.

அடுத்ததாக களமிறங்கிய டெல்லி அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் அதிரடியாக 41 பந்துகளில் 43 ரன்கள் எடுத்து கேட்ச் ஆகி வெளியேற்றினார். அடுத்ததாக இறங்கிய ரிஷாப் பண்ட், ராகுல், கோளின் இங்கிரான் தலா 5 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். இறுதியில் டெல்லி அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 129 ரன்களை எடுத்து ஐதராபாத் அணிக்கு 130 என்ற வெற்றி இலக்கை நிரணயித்தது.

IPL 2019

இதனையடுத்து எளிதாக வெற்றிபெற்றுவிடலாம் என களமிறங்கிய ஐதராபாத் அணியின் துவக்க ஆட்டக்காரர்களான வார்னர் மற்றும் ஜானி பைர்ஸ்டவ் களமிறங்கினர். வார்னர் 18 பந்துகளில் 10 ரன்கள் எடுத்து வெளியேறினார். சிறப்பாக ஆடிய ஜானி பைர்ஸ்டவ் 28 பந்துகளில் 48 ரன்கள் எடுத்து அவுட் ஆகி வெளியேறினார்.

அதனையடுத்து களமிறங்கிய அணைத்து வீரர்களும் சொற்ப ரன்களில் அவுட் ஆகி எளிதாக வெற்றிபெறவேண்டிய ஆட்டத்தை மிகவும் கஷ்டப்பட்டு 18.3 வது ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 131 ரன்களை எடுத்து சன்ரைசர்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றிபெற்றது.