விளையாட்டு

மனைவியின் ஆட்டத்தை நேரில் பார்ப்பதற்காக முக்கிய போட்டியிலிருந்து விலகிய ஸ்டார்க்!

Summary:

Starc leaves from south africa to watch wife in worldcup final

மகளிர் டி20 உலக்கோப்பையின் இறுதிப்போட்டி வரும் ஞாயிற்றுக்கிழமை ஆஸ்திரேலியாவின் மெல்பர்ன் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்த போட்டியில் முன்னாள் சாமம்பியன் ஆஸ்திரேலியா அணி இந்தியாவை எதிர்கொள்கிறது.

இந்த தொடரின் முதல் ஆட்டத்தில் இந்தியாவிடம் தோல்வியுற்றதால் பழிவாங்கும் நோக்கத்துடன் ஆஸ்திரேலியாவும் முதல் முறையாக சாம்பியன் பட்டத்தை வெல்ல வேண்டும் என்ற முனைப்புடன் இந்தியாவும் உள்ளதால் ஆட்டம் மிக விறுவிறுப்பாக இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

இதனைத் தொடர்ந்து ஆஸ்திரேலியா மகளிர் அணியில் இடம்பெற்றுள்ள தனது மனைவி ஆலிஷா ஹீலியின் ஆட்டத்தை நேரில் காண ஆஸ்திரேலியா அணியின் வேகப்பந்து வீச்சாளர் மிச்செல் ஸ்டார்க் தென்னாப்பிரிக்கா தொடரில் இருந்து விலகி நாடு திரும்புகிறார். இதற்கு அந்நாட்டு கிரிக்கெட் வாரியமும் அனுமதி அளித்துள்ளது.

ஆலிஷா ஹீலி ஆஸ்திரேலியா மகளிர் கிரிக்கெட் அணியில் விக்கெட் கீப்பிங் மற்றும் பேட்டிங்கில் சிறந்து விளங்குகிறார். சொந்த மண்ணில் தன் மனைவி உலக்கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் விளையாடுவதை நேரில் காண மிக்க மகிழ்ச்சியாக உள்ளது என ஸ்டார்க் தெரிவித்துள்ளார்.


Advertisement