புஷ்பா 2 எப்படி? புளூ சட்டை மாறன் விமர்சனம் இதோ.. பாராட்டு., பன்ச்.. என்டில் ட்விஸ்ட்.!
பாகிஸ்தான் அணி பரிதாபம்.. பொருளாதார நெருக்கடியில் தவிக்கும் இலங்கை மக்களின் முகத்தில் மலர்ந்த புன்னகை.!
ஐக்கிய அரபு எமிரேட்சில் ஆசிய கோப்பை கிரிக்கெட்தொடரின் T20 15வது சீசன் நடந்தது. இதன் 'சூப்பர்-4' சுற்றுடன் இந்தியா வெளியேறியது. இந்த தொடரின் இறுதி ஆட்டம் துபாயில் நேற்று நடைபெற்றது. இறுதி போட்டியில் பாகிஸ்தான்- இலங்கை அணிகள் மோதின.
நேற்றைய ஆட்டத்தில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி, இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்தது. இலங்கை அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 170 ரன்கள் எடுத்தது. இதையடுத்து 171 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் அணி பேட்டிங் செய்தது.
பாக்கிஸ்தான் அணிக்கு ஆரம்பத்தில் இருந்தே இலங்கை அணியினரும் பந்து வீச்சில் மிரட்டல் கொடுத்தனர். இறுதியில், பாகிஸ்தான் அணி 147 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுக்களையும் பறிகொடுத்தது. இதையடுத்து 23 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை அணி வெற்றி பெற்றது. மேலும் 6-வது முறையாக ஆசிய கோப்பையை கைப்பற்றி அசத்தியது.
ஆசிய கோப்பை பைனலில் பாகிஸ்தான் அணி, மூன்றாவது முறையாக தோல்வியை தழுவியது. இலங்கை அணி ஆசிய கோப்பையை கைப்பற்றியதன் மூலம் கடும் பொருளாதார நெருக்கடியில் தவிக்கும் இலங்கை மக்களின் முகத்தில் புன்னகையை மலரச் செய்துள்ளனர்.