ஆரம்பமே அமர்க்களம்!! முதல் போட்டியிலேயே பல சாதனைகளை முறியடித்த தென்னாப்பிரிக்கா

ஆரம்பமே அமர்க்களம்!! முதல் போட்டியிலேயே பல சாதனைகளை முறியடித்த தென்னாப்பிரிக்கா



Srilanka vs South Africa cricket match

ஒரு நாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் நான்காவது போட்டியில் இலங்கைக்கு எதிராக முதலில் பேட்டிங் செய்த தென்னாப்பிரிக்கா அணி தனது முதல் போட்டியிலேயே பல சாதனைகளைப் படைத்துள்ளது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. தென்னாப்பிரிக்கா அணிக்காக குயிண்டன் டீ காக்குடன் துவக்க ஆட்டக்காரராக களம் இறங்கிய கேப்டன் பவுமா இரண்டாவது ஓவரிலேயே 5 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார். அடுத்ததாக ஜோடி சேர்ந்த டீ காக் மற்றும் வேன்டர் டசன் இருவரும் இலங்கை அணியின் பந்துவீச்சை அடித்து நொறுக்க ஆரம்பித்தனர்.

test match

இருவருமே சதம் அடித்து ஆட்டம் இழந்த நிலையில் அடுத்து வந்த மார்க்கரம் தனது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் 49 பந்துகளில் நூறு ரன்களைக் கடந்தார். உலகக் கோப்பை வரலாற்றில் குறைந்த பந்துகளில் சதம் அடித்த சாதனையை படைத்தார் மார்க்கரம்.

மேலும் உலகக் கோப்பை வரலாற்றில் ஒரே இன்னிங்ஸில் மூன்று வீரர்கள் சதம் அடிப்பது இதுவே முதல் முறையாகும். 50 ஓவர்கள் முடிவில் தென்னாப்பிரிக்கா அணி 5 விக்கெட்டுகளை இழந்து 428 ரன்கள் எடுத்தது மேலும் ஒரு சாதனையாக அமைந்து விட்டது. உலகக் கோப்பை வரலாற்றில் ஒரு இன்னிங்ஸின் அதிகபட்ச ஸ்கோர் இதுவே ஆகும்.