7 ஆண்டு தடைக்கு பின், மீண்டும் களத்தில் இறங்கும் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர்!

7 ஆண்டு தடைக்கு பின், மீண்டும் களத்தில் இறங்கும் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர்!



sreesanth-play-will-ranji-trophy

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான கேரளாவை சேர்ந்த ஸ்ரீசாந்த் கடந்த 2013-ம் ஆண்டில் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடும் போது, சூதாட்டத்தில் ஈடுபட்டதாக டெல்லி போலீசாரால் கைது செய்யப்பட்டு வாழ்நாள் தடை பெற்று இருந்தார்.

பின்னர் நீதிமன்றத்தில் முறையிட்டு அதை ஏழாண்டுகளாக குறைத்தார் ஸ்ரீசாந்த். அவரது தடை வரும் செப்டம்பர் 2020-உடன் முடிவடைகிறது. இந்த நிலையில் அவர் ரஞ்சி ட்ராபி தொடரில் ஆட உள்ளதாக தகவல்கள் வெளியாகி வந்தது. அவரது உடல் தகுதியை பொறுத்து அணியில் இடம் பெறுவது முடிவாகும் என்று கேரள அணியின் புதிய பயிற்சியாளர் கூறியுள்ளார்.

sreesanth

அதை உறுதிப்படுத்தும் வகையில் கேரளா மாநில ரஞ்சி ட்ராபி தொடருக்கான உத்தேச அணியில் ஸ்ரீசாந்த் பெயர் சேர்க்கப்பட்டுள்ளது. சுமார் 7 ஆண்டுகள் கழித்து ஸ்ரீசாந்த் கிரிக்கெட் களத்தில் விளையாட உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஸ்ரீசாந்த் 2005 முதல் 2011-ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் இந்திய அணிக்காக 27 டெஸ்ட் போட்டியில் விளையாடி 87 விக்கெட்டும், 53 ஒருநாள் போட்டியில் ஆடி 75 விக்கெட்டும், 10 20ஓவர் போட்டியில் விளையாடி 7 விக்கெட்டும் வீழ்த்தி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.