இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே ஒருநாள் போட்டி.! கொரோனா நிதிக்காக சோயிப் அக்தர் யோசனை.!

இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே ஒருநாள் போட்டி.! கொரோனா நிதிக்காக சோயிப் அக்தர் யோசனை.!


shoaib-akhtar-proposes-india-vs-pakistan-odi-series-to

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவிவருகிறது. கொரோனவை கட்டுப்படுத்த உலகம் முழுவதும் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருகிறது. மேலும், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக பல்வேறு நிறுவனங்கள், பிரபலங்கள், அமைப்புகள், சாதாரண மக்கள் என பலரும் நிதி வழங்கி வருகின்றனர்.

இந்நிலையில், கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த நிதி திரட்டுவதற்காக இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடத்தி, அதன் மூலம் நிதி திரட்டினால் என்ன? என யோசனை வழங்கியுள்ளார் முன்னாள் பாகிஸ்தான் அணியின் வேக பந்து வீச்சாளர் சோயிப் அக்தர்.

corono

ஏற்கனவே பாகிஸ்தான் நாட்டுடன் பல்வேறு பிரச்சனைகள் நிலவிவரும் நிலையில், கொரோனா காரணமாக ஐபில், பல்வேறு கிரிக்கெட் தொடர்களை அரசு நிறுத்திவைத்துள்ளதால், அக்தரின் இந்த யோசனை ஏற்கப்படுமா என நெட்டிசன்கள் விவாதித்து வருகின்றனர்.