ஆஸ்திரேலிய அணியின் ஆல்-ரவுண்டர் வீரர் ஷேன் வாட்சனுக்கு புதிய பதவி! மீண்டும் வலுப்பெறுகிறது ஆஸ்திரேலிய அணி!

ஆஸ்திரேலிய அணியின் ஆல்-ரவுண்டர் வீரர் ஷேன் வாட்சனுக்கு புதிய பதவி! மீண்டும் வலுப்பெறுகிறது ஆஸ்திரேலிய அணி!


shane-watson-appointed-president-of-australian-crickete


முன்னாள் ஆஸ்திரேலிய அணியின் ஆல்-ரவுண்டர் வீரரான ஷேன் வாட்சன் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்கள் சங்கத்தின் (ACA) தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

முன்னாள் ஆஸ்திரேலிய அணியின் ஆல்-ரவுண்டர் வீரரான ஷேன் வாட்சன் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்கள் சங்கத்தின் (ACA) தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த பதவியானது அவருக்கு விளையாட்டுக்குத் திரும்ப உதவும் என்று கூறியுள்ளார்.

திங்கள்கிழமை இரவு நடந்த ACA.வின் வருடாந்திர பொதுக் கூட்டத்தில் இந்த நியமனம் செய்யப்பட்டது. இதுகுறித்து ஆஸ்திரேலிய அணியின் ஆல்-ரவுண்டர் வாட்சன் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டார்.

cricket

அவரது ட்விட்டர் பதிவில், 'ஏ.சி.ஏ-வின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு நான் நிஜமாகவே பெருமைப்படுகிறேன். எனக்கு முன் சென்றவர்களின் காலடி தடங்களை நிரப்ப எனக்கு பெரிய காலணிகள் கொடுக்கப்பட்டுள்ளன என தெரிவித்தார்.

இதுவரை ஆஸ்திரேலிய அணிக்காக வாட்சன் 59 டெஸ்ட், 190 ஒருநாள் மற்றும் 58 டி 20 போட்டிகளில் விளையாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.