BREAKING: மீண்டும் மீண்டுமா.... ஜனநாயகன் பட வழக்கில் உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!!
கேப்டன் பதவியில் இருந்து விராட் நீக்கப்பட்டதற்கு நான் காரணமா? - உண்மையை கூறிய சவுரவ் கங்குலி.!
கடந்த 2021 டி20 உலகக்கோப்பை போட்டியிலிருந்து, தகுதி சுற்றில் வெளியேறிய இந்திய அணி தோல்வியடைந்து வெளியேறியது. அன்றைய கேப்டன் விராட் கோலி தனது பதவியில் இருந்து விலகினார்.
அதைத்தொடர்ந்து, டெஸ்ட் தொடரில் கேப்டன் பதவிகளையும் கோலி கைவிட முடிவு செய்ததாக கூறப்பட்ட நிலையில், அவர் பதவியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டார்.
இது தொடர்பான சம்பவங்கள் அடுத்தடுத்த நடைபெற்ற போது, சவுரவ் கங்குலி பிசிசிஐ தலைவராக இருந்தார். அவரின் மீது பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்ட நிலையில், தற்போது இது தொடர்பாக கங்குலி விளக்கம் அளித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், "மேற்கூறிய விபரத்திற்கும் எனக்கும் எந்த பங்கும் இல்லை. அவரின் முடிவுக்குப் பின்னால் நான் இல்லை" என்று தெரிவித்துள்ளார்.