விளையாட்டு

நான் கேப்டன் ஆனதும் இவங்க 3 பேரும் எனக்கு மெசேஜ் பண்ணாங்க!! – சஞ்சு சாம்சன் கூறிய அந்த மூன்று பேர் யார் தெரியுமா?

Summary:

தான் கேப்டன் பொறுப்பை ஏற்றபிறகு மூன்று பிரபல வீரர்களிடம் இருந்து தனக்கு வாழ்த்து மெசேஜ் வந

தான் கேப்டன் பொறுப்பை ஏற்றபிறகு மூன்று பிரபல வீரர்களிடம் இருந்து தனக்கு வாழ்த்து மெசேஜ் வந்ததாக கூறியுள்ள இளம் கேப்டன் சஞ்சு சாம்சன்.

ஐபில் T20 சீசன் 14 நாளை மறுநாள் தொடங்குகிறது. முதல் போட்டியில் மும்பை அணி பெங்களூருவுடனும், இரண்டாவது போட்டியில் சென்னை அணி டெல்லி அணியுடனும் மோதுகிறது. ஐபில் போட்டியை முன்னிட்டு அனைத்து அணி வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுவருவதுடன் இந்த முறை கோப்பையை வெல்ல உத்வேகத்துடன் உள்ளனர்.

குறிப்பாக ராஜஸ்தான் அணி இந்தமுறை கோப்பையை வெல்ல பயங்கர முனைப்புடன் உள்ளது. ஏற்கனவே ஏணியின் கேப்டனாக செயல்பட்டுவந்த ஸ்மித்தை அணியில் இருந்து நீக்கிய ராஜஸ்தான் அணி தற்போது இளம் வீரர் சஞ்சு சாம்சனை அணியின் கேப்டனாக நியமித்துள்ளது.

நான் கேப்டனாக ஆன பிறகு இவங்க மூன்னு பேரும் எனக்கு மெசேஜ் பண்ணாங்க ! - சஞ்சு சாம்சன் பேட்டி 4

கேரளா அணிக்காக விளையாடிவரும் சஞ்சு சாம்சன் முதல் முறையாக ஐபில் அணியின் கேப்டனாக பொறுப்பேற்றுள்ளார். இதுகுறித்து சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய சஞ்சு சாம்சன், "நான் ராஜஸ்தான் அணியின் கேப்டனாக பொறுப்பேற்றது மிகவும் மகிழ்ச்சி எனவும், நான் கண்டிப்பாக எனது கடமையை செய்து அணியின் வெற்றிக்கு உறுதுணையாக இருப்பேன் என கூறினார்.

மேலும், தான் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டதும் மாகி பாய், ரோஹித் பாய் மற்றும் கோலி பாய் இவங்க மூன்று பேரும் எனக்கு வாழ்த்து மெசேஜ் அனுப்பியதாகவும், அதனை பார்க்கும்போது தனக்கு பெருமையாகவும், மகிழ்ச்சியாகவும் இருந்தது" எனவும் சஞ்சு சாம்சன் கூறியுள்ளார்.


Advertisement