விளையாட்டு வீடியோ

யுவராஜ் விடுத்த சவாலை அசத்தலாக செய்து முடித்த சச்சின் டெண்டுல்கர்! வைரலாகும் மாஸ் வீடியோ

Summary:

Sachin tendulkar accept yuvraj challenge

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவி நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் கொரோனோவை கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் இதனால் ஐபிஎல் போட்டிகள்,  கிரிக்கெட் போட்டிகள் என அனைத்தும் தடை செய்யப்பட்டுள்ளது

இந்நிலையில் கிரிக்கெட் வீரர்கள் அனைவரும் டப்ஸ்மாஷ் செய்வது,  சக வீரர்களுக்கு சவால் விடுவது என மிகவும் பிஸியாக உள்ளனர் . இந்நிலையில் இந்திய கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் யுவராஜ் பந்தை தொடர்ச்சியாக அடித்துக் கொண்டிருந்தார். இதன்மூலம் தான் இப்படித்தான் வீட்டிலிருந்து கொரோனாவுடன் போராடுவதாகவும், இந்த சவாலை சச்சின் டெண்டுல்கர், ரோகித்  ஷர்மா, ஹர்பஜன் சிங் ஆகியோர் சவாலை ஏற்றுக்கொண்டு வீடியோ வெளியிட வேண்டும் என பதிவிட்டிருந்தார்.

அதனைத்தொடர்ந்து சச்சின் டெண்டுல்கர் இதனை ஏற்றுக்கொண்டு, சவாலை முடித்து வீடியோ வெளியிட்டுள்ளார மேலும் அந்த சவாலை அவர் கண்களை கருப்புதுணியால் கட்டிக்கொண்டு செய்துள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


Advertisement