வீரத்தமிழன் சேலத்து நடராஜனுக்காக கோரிக்கை வைத்த சச்சின் டெண்டுல்கர்.! கெத்து காட்டும் நம்ம வீரப்பிள்ளை.!

வீரத்தமிழன் சேலத்து நடராஜனுக்காக கோரிக்கை வைத்த சச்சின் டெண்டுல்கர்.! கெத்து காட்டும் நம்ம வீரப்பிள்ளை.!



sachin talk about natarajan

இந்திய அணியின் தமிழகத்தை சேர்ந்த வேகப்பந்து வீச்சாளர் சேலத்து நடராஜன் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் 2 விக்கெட்டுகளை வீழ்த்தி ஒட்டுமொத்த ரசிகர்களின் மனதில் நீங்கா இடம்பிடித்தார். 20 ஓவர் தொடரில் அவர் 6 விக்கெட்டுகளை வீழ்த்தி குறைந்த ரன்களையே கொடுத்திருந்தார்.

ஆஸ்திரேலியாவுக்கு சென்று T20 தொடரை இந்திய அணி கைப்பற்றுவதற்கு நடராஜன் முக்கிய காரணமாக இருந்தார். தமிழக வீரர் நடராஜன் தான் சந்தித்த முதல் சர்வதேச ஒருநாள் போட்டி மற்றும் T20 போட்டியில் முக்கிய வீரர்களை வீழ்த்தி எதிரணியை திணறவைத்த நிகழ்வு ஒட்டுமொத்த ரசிகர்களிடம் பாராட்டை பெற்றது.

natarajan

இந்த நிலையில் தமிழக வீரர் நடராஜனை ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் அணியிலும் சேர்க்க வேண்டும் என்று சச்சின் டெண்டுல்கர் கூறியுள்ளார். டெஸ்ட் அணியில் இஷான் சர்மா இடம்பெறாத நிலையில் அவரது இடத்தில் நடராஜனை சேர்ப்பது குறித்து பரிசீலிக்கலாம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் நடராஜன் சிறப்பாக பந்து வீசுவதாகவும் சச்சின் டெண்டுல்கர் பாராட்டு தெரிவித்துள்ளார்.