விளையாட்டு

சென்னை அணியில் ஒரு விராட்கோலி! இவர்தான் இனி அடுத்த விராட்கோலி! இளம் வீரருக்கு குவியும் வாழ்த்துக்கள்

Summary:

இந்திய அணியின் அடுத்த விராட்கோலி ருத்ராஜ்தான் என ருத்ராஜை புகழ்ந்து தள்ளியுள்ளார் சென்னை அணி வீரர் டுப்ளசிஸ்.

இந்திய அணியின் அடுத்த விராட்கோலி ருத்ராஜ்தான் என ருத்ராஜை புகழ்ந்து தள்ளியுள்ளார் சென்னை அணி வீரர் டுப்ளசிஸ்.

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்துவரும் ஐபில் 13 வது சீசனில் சென்னை அணி முதல் சுற்றில் இருந்து வெளியேறியுள்ளது. தொடக்கத்தில் தொடர்ந்து சொதப்பிவந்த சென்னை அணி கடைசி மூன்று போட்டிகளிலும் தொடர் வெற்றிபெற்று சென்னை அணி ரசிகர்கள் மத்தியில் சற்று மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அதேநேரம், தொடக்கத்தில் சொதப்பி வந்த இளம் வீரர் ருத்ராஜ் கடைசி மூன்று போட்டிகளில் சிறப்பாக ஆடி மூன்று அரைசதங்களை கடந்து சாதனை படைத்துள்ளார். அதுவும் நேற்றைய போட்டியில் டுப்ளஸி உடன் சேர்ந்து களமிறங்கிய ருத்ராஜ் இறுதி வரை ஆட்டம் இழக்காமல் 62 ரன்கள் அடித்து சென்னை அணி வெற்றிபெற உறுதுணையாக இருந்தார்.

மேலும் சென்னை அணியின் வரலாற்றில் தொடர்ந்து மூன்று போட்டிகளில் அரைசதம் அடித்த ஒரே வீரர் ருத்ராஜ்தான், இந்நிலையில் நேற்றைய போட்டிக்கு பிறகு பேட்டியளித்த மூத்த வீரர் டுப்ளசிஸ் பேசும்போது, "ருதுராஜ் கெயிக்வாட் அடுத்த விராட் கோலி போல ஆடுவதாக அவரை பாராட்டியுள்ளார். குறிப்பாக, அழுத்தமான சூழ்நிலைகள் அவரை ஒன்றுமே செய்யவில்லை எனவும், அது ஒரு இளம் வீரரிடம் காணப்படும் அரிய விஷயம் எனவும் அவர் கூறியுள்ளார்".


Advertisement