இந்த அடி போதுமா.. இன்னும் கொஞ்சம் வேணுமா.!! ஆத்தாடி.. மரணகாட்டு காட்டிய கோலி படை.!

இந்த அடி போதுமா.. இன்னும் கொஞ்சம் வேணுமா.!! ஆத்தாடி.. மரணகாட்டு காட்டிய கோலி படை.!


royal-challengers-bangalore-won-by-10-wkts

14-வது ஐபிஎல் சீசனின் 16-வது ஆட்டத்தில் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் நேற்று மும்பை வான்கடே மைதானத்தில் மோதியது. இந்த ஆட்டத்தில் முதலில் டாஸ் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் கேப்டன் விராட் கோலி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். 

இதனையடுத்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் துவக்க வீரர்களாக பட்லர், வோரா ஆகியோர் களமிறங்கினர். ஆனால் பட்லர் 8 ரன்களிலும், வோரா 7 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இதனையடுத்து களமிறங்கிய சஞ்சு சாம்சன் 21 ரன்கள் எடுத்தநிலையில் கேட்ச் கொடுத்து வெளியேறினார். இதனையடுத்து களமிறங்கிய துபே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 32 பந்துகளுக்கு 46 ரன்கள் எடுத்தநிலையில் ஆட்டமிழந்தார்.

              rcb

கடைசியில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய ராகுல் திவாட்டியா 40 ரன்கள் எடுத்தார். இறுதியில் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு ராஜஸ்தான் ராயல்ஸ் 177 ரன்கள் எடுத்தது. பெங்களூரு அணியில் சிராஜ் மற்றும் ஹர்சல் படேல் தலா 3 விக்கெட்டுகளையும், ஜெமிசன், ரிச்சட்சன் மற்றும் வாசிங்டன் சுந்தர் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர். இதனையடுத்து 178 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பெங்களூரு அணி களமிறங்கியது.

பெங்களூரு அணியின் துவக்க வீரர்களாக விராட் கோலி மற்றும் படிக்கல் களமிறங்கினர். ஆரம்பத்திலிருந்தே இருவரும் அதிரடி காட்டினர். விராட் 47 பந்துகளுக்கு 72 ரன்கள் எடுத்தநிலையிலும், படிக்கல் 52 பந்துகளுக்கு 101 ரன்கள் எடுத்தநிலையிலும் கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் நின்று 16.3 ஓவர்களில் 181 ரன்கள் எடுத்து 10 விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூரு அணி அபார வெற்றி பெற்றது.