திடீரென மைதானத்திற்குள் ரோகித்சர்மாவின் காலில் விழுந்த ரசிகர்!. வைரலாகும் வீடியோ!.

திடீரென மைதானத்திற்குள் ரோகித்சர்மாவின் காலில் விழுந்த ரசிகர்!. வைரலாகும் வீடியோ!.


rohith sharma fan suddenly fall down his foot in stadium

வீராட்கோலி தலைமையிலான இந்திய அணி தற்போது மேற்கிந்திய தீவு அணியுடன் டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.

டெஸ்ட் போட்டிக்கான அணியில் இந்திய அணியின் துவக்க வீரர் ரோகித் சர்மா இல்லாததால், அவர் தற்போது உள்ளூர் தொடரான விஜய்ஹசாரே தொடரில் மும்பை அணிக்காக விளையாடி வருகிறார்.

காலிறுதிப் போட்டியில் பீகார் மற்றும் மும்பை அணிகள் மோதின. இதில் பீகார் அணி நிர்ணயித்த 70 ஓட்டங்களை மும்பை அணி 13 ஓவர்களில் எட்டி அசால்ட்டாக வெற்றி பெற்று அரையிறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.

இப்போட்டியில் மும்பை பேட்டிங் செய்து கொண்டிருந்த போது, திடீரென்று உள்ளே நுழைந்த ரசிகர் ஒருவர் ரோகித் சர்மாவின் காலை தொட்டு வணங்கினார். உடனடியாக ரோகித் அவரை எழுப்பியுள்ளார்.

அது தொடர்பான வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை ரோகித்சர்மாவின் ரசிகர்கள் பகிர்ந்து வருகின்றனர்.