உலகம் விளையாட்டு WC2019

உலகக்கோப்பையை வென்ற இங்கிலாந்து அணி!! அதிருப்தியுடன் ரோஹித் சர்மா என்ன கூறியுள்ளார் தெரியுமா?

Summary:

rohit sharma tweet about england victory

கடந்த மே மாதம் 30ஆம் தேதி இங்கிலாந்தில் துவங்கிய உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் இங்கிலாந்து அணி சூப்பர் ஓவர் முடிந்தும் அதிகமான பவுண்டரிகள் அடித்த அணி என்ற அடிப்படையில் உலக கோப்பையை வென்றது. இதற்கு முக்கிய காரணமாக இருந்தவர் அந்த அணியின் ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ்.

இந்த பரபரப்பான இறுதிப் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 241 ரன்கள் எடுத்தது. அதனை தொடர்ந்து களமிறங்கிய இங்கிலாந்து அணியும் 50 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 241 ரன்கள் அடித்தது.

2019 உலகக்கோப்பை இறுதிப்போட்டி டையில் முடிந்ததால் சூப்பர் ஓவர் அறிவிக்கப்பட்டது. பின்னர் சூப்பர் ஓவரும் டையில் முடிந்ததால் அதிக பவுண்டரிகள் அடித்ததன் மூலம் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.இது பெரும் சர்ச்சையை கிளப்பியது.

rohit sarma க்கான பட முடிவு

இந்நிலையில் இத்தகைய வித்தியாசமான விதிகளை குறித்து இந்திய அணி வீரர் ரோகித் சர்மா தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், கிரிக்கெட்டில் உள்ள சில விதிகள் குறித்து தீவிரமான ஆய்வு செய்யவேண்டும் என பதிவிட்டுள்ளார்.
 


Advertisement