இது டெஸ்ட் போட்டியா.! இல்லை T20 யா.? அனல்பறக்கும் ரோஹித் ஷர்மாவின் ஆட்டம்.!

இது டெஸ்ட் போட்டியா.! இல்லை T20 யா.? அனல்பறக்கும் ரோஹித் ஷர்மாவின் ஆட்டம்.!


rohit sharma playing very well

ஜோ ரூட் தலைமையிலான இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 4 டெஸ்டுகள், 5 டி20, 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடவுள்ளது. முதலில் 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் சென்னை சேப்பாக்கத்தில் நடந்த முதலாவது டெஸ்டில் 227 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது இங்கிலாந்து அணி.

இந்தநிலையில், இந்தியா-இங்கிலாந்து அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி சென்னை சேப்பாக்கத்தில் இன்று தொடங்கியுள்ளது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி, முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார். இந்தநிலையில், இங்கிலாந்து அணி முதலில் பந்து வீச துவங்கியது. இந்திய அணியின் துவக்க வீரர்களாக ரோஹித் சர்மா மற்றும் சுப்மான் கில் களமிறங்கினர்.

test cricket

 சுப்மான் கில் ரன் எதுவும் எடுக்காமல் ஆலி ஸ்டோன் ஓவரில் அவுட் ஆனார். அடுத்ததாக களமிறங்கிய புஜாரா ஜோடி சேர்ந்தார். புஜாரா 21 ரன்களில் ஜேக் லீச் பந்தில் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அடுத்ததாக களம் இறங்கிய கேப்டன் விராட் கோலி, மோயின் அலி ஓவரில் போல்டு ஆனார். 

முதல் டெஸ்ட் போட்டியில் சொதப்பிய ரோஹித் சர்மா T20 ஆட்டம்போல் அதிரடியாக ஆடி 93 பந்துகளில் 82 ரன்கள் எடுத்துள்ளார். அதில் 13 பவுண்டரிகளும் 1 சிக்சரும் அடங்கும். தற்போது ரோஹித் சர்மா 82 ரன்களுடனும், ரகானே 5 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். தற்போது 31 ஓவர்கள் நிறைவுற்ற நிலையில் இந்திய அணி 3 விக்கெட் இழப்பிற்கு 112 ரன்கள் எடுத்து ஆடிவருகிறது.