விளையாட்டு

விக்கெட்டுகள் சரிந்தாலும் அதிரடியை விடாத ரோகித் சர்மா! மீண்டும் சதமடித்து அசத்தல்

Summary:

Rohit sharma 3rd century in south africa trst series

ராஞ்சியில் இன்று துவங்கிய தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் சதம் அடித்து அசத்தியுள்ளார் ரோகித் சர்மா. 

ஏற்கனவே இரண்டு டெஸ்ட் போட்டிகளில் வென்று தொடரை கைப்பற்றிய இந்திய அணி இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. ஆட்டத்தின் முதல் 16 ஓவர்களிலேயே இந்திய அணி 39 ரன்கள் மட்டுமே எடுத்து மயங் அகர்வால், புஜாரா, கோலி ஆகிய 3 முக்கிய விக்கெட்டுகளை இழந்தது. 

அதன் பிறகு நான்காவது விக்கெட்டிற்கு ஜோடி சேர்ந்த ரோகித் சர்மா மற்றும் ரஹானே சிறப்பான அதிரடி ஆட்டத்தினை வெளிப்படுத்தினர். உணவு இடைவேளைக்கு பிறகு அரைசதத்தை கடந்த இருவரும் விடாமல் சிக்சர் பவுண்டரி என அதிரடி காட்டினர். 

சிக்சர் மழை பொழிந்த ரோகித் சர்மா 45 ஆவது ஓவரில் மீண்டும் ஒரு சிக்சர் அடித்து 130 பந்துகளில் 100 ரன்களை கடந்தார். இது இவரது 6 ஆவது டெஸ்ட் சதமாகும். இந்த தொடரில் முதல் போட்டியில் இரண்டு சதமடித்த ரோகித் மூன்றாவது சதத்தையும் விளாசினார். 

45 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 3 விக்கெட் இழப்பிற்கு 184 ரன்கள் எடுத்துள்ளது. ரோகித் சர்மா 101, ரஹானே 60 ரன்கள் எடுத்து விளையாடி வருகின்றனர். 


Advertisement