என்ன நடந்தது.? ஒரே பந்தை துரத்தி இரண்டு திசையில் ஓடிய இந்திய வீரர்கள்.. வைரல் வீடியோ..



Rishap pand and rohith sharma ran opposite directions

இங்கிலாந்து அணி வீரர் அடித்த பந்தை தடுக்க இந்திய அணி வீரர்கள் இரண்டு திசையில் ஓடிய வீடியோ காட்சி இணையத்தில் வைரலாகிவருகிறது.

இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி தற்போது டெஸ்ட் போட்டியில் விளையாடிவருகிறது. இரண்டு அணிகளும் மோதும் முதல் டெஸ்ட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடந்துவருகிறது. முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 578 ரன்களை குவித்தது. இதில் அதிகபட்சமாக இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் 218 ரன்கள் அடித்தார்.

இதனை அடுத்து களமிறங்கிய இந்திய அணி 337 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இந்நிலையில் முதல் இன்னிங்சில் இங்கிலாந்து அணி பேட்டிங் செய்துகொண்டிருந்தபோது, இந்திய அணி வீரர் அஸ்வின் வீசிய 151 ஓவரில், இங்கிலாந்து வீரர் ஒல்லி போப் அடித்த பந்து ஒன்று பேட்டில் எட்ஜ் ஆகி கீப்பருக்கு பின்னால் சென்றது.

பந்து செல்லும் திசையை சரியாக கணித்த ரோஹித் சர்மா பந்தை எடுக்க, பந்து செல்லும் திசையில் ஓடினார். ஆனால் பந்து செல்லும் திசை தெரியாமல் கீப்பிங் செய்துகொண்டிருந்த ரிஷப் பந்த், சம்பந்தமே இல்லாமல் பந்து சென்ற திசைக்கு எதிராக ஓடி கேட்ச் பிடிப்பதுபோல் சென்றார்.

எனவே ஒரு பந்திற்கு இரண்டு வீரர்கள் எதிர் எதிர் திசையில் ஓடிய காட்சியை பார்த்த போட்டி வர்ணனையாளர்கள் சிரித்தனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.