வாவ்..!! அதிரடி வீரரை அணியின் கேப்டனாக அறிவித்த டெல்லி அணி..!! ஆட்டம் இனிதான் களைகட்ட போகுது..

வாவ்..!! அதிரடி வீரரை அணியின் கேப்டனாக அறிவித்த டெல்லி அணி..!! ஆட்டம் இனிதான் களைகட்ட போகுது..


rishabh-pant-as-new-captain-for-delhi-capitals

வரவிருக்கும் ஐபில் 2021 இல் டெல்லி அணிக்கு புது கேப்டனாக ரிஷப் பண்ட் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இந்த ஆண்டிற்கான ஐபில் போட்டிகள் அடுத்த மாதம் முதல் தொடங்க உள்ளது. சென்னையில் நடைபெறும் முதல் போட்டியில் மும்பை மற்றும் பெங்களூரு அணிகள் மோதுகின்றன. மும்பையில் நடைபெறும் போட்டியில் சென்னை மற்றும் டெல்லி அணிகள் மோதுகின்றன.

இந்நிலையில் ஐபில் போட்டிகள் தொடங்க இன்னும் ஒருசில நாட்களே இருக்கும் நிலையில், அனைத்து அணிகளும் தற்போதில் இருந்தே தீவிர பயிற்சியில் ஈடுபட்டுவருகிறது. இந்நிலையில் டெல்லி அணி தங்கள் அணிக்கு புதிய கேப்டனை அறிமுகம் செய்துள்ளது.

முன்னதாக டெல்லி அணியை வழிநடத்திவந்த இளம் வீரர் ஷ்ரேயாஸ் ஐயர், இந்திய - இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒரு நாள் தொடரின் முதல் போட்டியின் போது, காயமடைந்தார். அவரது தோள்பட்டையில் காயம் பலமாக ஏற்பட்டதால் அவர் ஒருநாள் தொடரில் இருந்து விலகினார். மேலும் காயம் தீவிரமாக இருப்பதால் அவர் குணமடைய, 4 - 5 மாதங்கள் வரை ஆகலாம் என்றும் கூறப்பட்டது.

IPL 2021

இதனால் ஷ்ரேயாஸ் ஐயர் ஐபில் போட்டிகளில் இருந்தும் வெளியேறும் சூழல் உருவானது. இதனால் வரவிருக்கும் ஐபில் தொடரில் டெல்லி அணியை யார் வழிநடத்த போகிறார்? அணியின் புது கேப்டன் யார் என்ற கேள்வி எழுந்தது.

ஸ்டீவ் ஸ்மித், ரஹானே, அஸ்வின் உள்ளிட்ட மூத்த வீரர்களில் யாரவது ஒருவர் அணியின் கேப்டனாக தேர்வு செய்யப்படலாம் என பேச்சு அடிபட்டநிலையில், தற்போது அணியின் கேப்டனாக இளம் வீரர் ரிஷப் பண்ட் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக டெல்லி அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம் தொடங்கி, தற்போது நடந்து முடிந்த இங்கிலாந்து அணிக்கான போட்டிகள் வரை, அனைத்து போட்டிகளிலும் ரிஷப் பண்ட் மிகவும் அதிரடியாக விளையாடி இந்திய அணியை வெற்றிபெற செய்தார். இதனால் வரவிருக்கும் ஐபில் போட்டியில் அவர் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.