தினேஷ் கார்த்திக்கா? ரிஷப் பண்ட்டா? அரை இறுதிசுற்றில் களமிறங்கப் போவது யார்? ரவி சாஸ்திரி கொடுத்த முக்கிய யோசனை!!

தினேஷ் கார்த்திக்கா? ரிஷப் பண்ட்டா? அரை இறுதிசுற்றில் களமிறங்கப் போவது யார்? ரவி சாஸ்திரி கொடுத்த முக்கிய யோசனை!!



ravi-sastri-idea-for-who-is-eligible-for-semi-finale

8வது டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் தற்போது அரையிறுதி கட்டத்தை எட்டியுள்ளது. நாளை முதல் அறையிறுதிக்கான போட்டிகள் தொடங்கப்பட உள்ளது. இந்த சுற்றுக்கு இந்தியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, பாகிஸ்தான் போன்ற அணிகள் முன்னேறி உள்ளது.
இந்நிலையில் நாளை சிட்னி மைதானத்தில் நடைபெறும் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதவுள்ளது.

அதனைத் தொடர்ந்து நாளை மறுநாள் அடிலெய்டு மைதானத்தில் இந்தியா இங்கிலாந்து அணியுடன் மோதவுள்ளது. இந்நிலையில் இதில் வெற்றிபெற இந்திய அணி தீவிர பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இதற்கிடையில் பிளேயிங் 11-ல் விக்கெட் கீப்பராக தினேஷ் கார்த்திக்- ரிஷப் பண்ட் இவர்களில் யார் இறங்க வேண்டும் என்பது முக்கிய விவாதமாக உள்ளது.

Dinesh karthik

இது குறித்து இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி புதிய யோசனை கூறியுள்ளார்.  அவர் கூறியதாவது, தினேஷ் கார்த்திக் ஒரு சிறந்த வீரர். ஆனால் இங்கிலாந்து அல்லது நியூசிலாந்து அணிகளுக்கு எதிராக விளையாடும் போது அவர்களின் பந்துவீச்சு தாக்கத்தை சமாளிக்க இடது கை பேட்ஸ்மேன் தேவை. ரிஷப் பண்ட் இங்கிலாந்துக்கு எதிராக மிகவும் சிறப்பாக விளையாடியுள்ளார்.

எனவே ரிஷப் பண்டை களமிறக்க வேண்டும். அவர் இந்திய அணிக்கு சிறந்த துருப்புச் சீட்டாக இருப்பார். மேலும் இடது கை பேட்ஸ்மேனான ரிஷப் பண்ட் இருந்தால் எதிரணியின் வியூகத்தை மாற்றி அவர்களின் பந்து வீச்சிற்கு சிரமம் கொடுக்க முடியும். இல்லையெனில் எதிரணிக்கு எந்த சிரமமுமின்றி பந்து வீசும் சாதகத்தை உருவாக்கி கொடுப்பது போல ஆகிவிடும் என கூறியுள்ளார்.