இந்தியா விளையாட்டு

இதுதான் டா இந்தியன்.. ஆஸ்திரேலிய வீரர்களுக்கு சரியான பாடம் புகட்டிய ரகானே.. வைரலாகும் வீடியோ.

Summary:

கேக்கில் கங்காரு பொம்மை இருந்ததால் கேக் வெட்ட மறுத்த இந்திய அணி வீரர் ரகானேவின் வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகிவருகிறது.

கேக்கில் கங்காரு பொம்மை இருந்ததால் கேக் வெட்ட மறுத்த இந்திய அணி வீரர் ரகானேவின் வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகிவருகிறது.

ஆஸ்திரேலியா நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி ஒருநாள் போட்டியில் தோல்வி அடைந்தாலும் T20 மற்றும் டெஸ்ட் போட்டிகளில் அபரா வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளது. குறிப்பாக டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணி வீரர்கள் விளையாண்டவிதம் பலரின் பாராட்டையும் பெற்றுள்ளது.

அதிலும், பல்வேறு முன்னனி வீரர்கள் இல்லாமல் கூட, புதிய வீரர்களை வைத்து இந்திய அணியை வெற்றிபெற செய்துள்ளார் அணியின் கேப்டனாக செயல்பட்ட ரகானே. இந்நிலையில் ஆஸ்திரேலியாவில் இருந்து இந்தியா திரும்பிய இந்திய அணி வீரர்களுக்கு சிறப்பான வரவேற்ப்பு வழங்கப்பட்டு, வீரர்களை உற்சாகப்படுத்தினர்.

இந்நிலையில் ஆஸ்திரேலியாவில் இருந்து தாயாகம் திரும்பிய கேப்டன் ரகானேவுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க அவரின் நண்பர்கள் முடிவு செய்து, அதற்காக ஒரு ஸ்பெஷல் கேக் ஆர்டர் செய்திருந்தனர். ஆனால் அந்த கேக்கில் கங்காருவின் புகைப்படமும், அதன் கையில் இந்திய தேசிய கொடியும் இருப்பதுபோல் கேக் வடிவமைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் கேக்கை வெட்ட சென்ற ரகானே, அதில் கங்காரு புகைப்படம் இருந்ததால், கேக்கை வெட்ட மறுத்துவிட்டார். காரணம், கங்காரு ஆஸ்திரேலிய நாட்டின் தேசிய விலங்கு. எனவே அதனை வெட்டி ஆஸ்திரேலிய வீரர்களை காய படுத்தவேண்டாம் என்பதற்காக ரகானே அவ்வாறு நடந்துகொண்டார். பின்னர் அந்த கேக்கில் இருந்து கங்காரு புகைப்படம் நீக்கப்பட்டு பின்னர் அவர் அந்த கேக்கை வெட்டினார்.

ஆஸ்திரேலியாவில் விளையாடியபோது ஆஸ்திரேலிய அணி வீரர்கள் தொடங்கி, அந்நாட்டு ரசிகர்கள் வரை பலராலும் காயப்படுத்தப்பட்டு, அவமானப்படுத்தப்பட்டபோதிலும் கூட, அதையெல்லாம் பொருட்படுத்தாமல், மிகவும் பெருந்தன்மையுடன் ரகானே செய்த காரியம் தற்போது பலராலும் பாராட்டப்பட்டுவருகிறது.


Advertisement