இந்தியா விளையாட்டு Ipl 2019

போட்டி நடந்துகொண்டிருக்கும்பொழுது மைக்கில் கெட்டவார்த்தை பேசிய ராகுல்! அதிர்ச்சியில் ரசிகர்கள்!

Summary:

ragul talk bad words in live cricket


ஐபிஎல் 12ஆவது சீசன் தற்சமயம் விறுவிறுப்பாக நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. நேற்று நடைபெற்ற 42 ஆவது லீக் போட்டியில் பெங்களூரு அணியும் பஞ்சாப் அணியும் மோதியது. இதில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

பெங்களூரு அணியின் துவக்க ஆட்டக்காரர்களாக பார்திவ் பட்டேலும் விராட் கோலியும் களமிறங்கினர். ஆனால் துவக்கத்திலேயே விராட் கோலி தனது விக்கெட்டை இழந்து 13 ரன்களோடு வெளியேறினார். அப்போது போட்டியின் மத்தியில் மைதானத்தில் இருந்த பஞ்சாப் அணியின் விக்கெட்கீப்பர் ராகுலிடம் வர்ணனையாளர்கள் லைவ் மூலம் பேசிக்கொண்டிருந்தனர். 

அப்போது போட்டியின் நிலைமை பற்றி ராகுல் வர்ணனையாளர்களுடன், இந்தப் போட்டியில் பெங்களூர் அணியை 160-180 ரன்களுக்குள் சுருட்ட வேண்டும் என்பது பற்றி ராகுல் பேசிக்கொண்டிருந்தார். அப்போது பார்த்திவ் பட்டேல் ஒரு பவுண்டரி அடித்தார். இதைக் கண்ட ராகுல் உணர்ச்சிவசப்பட்டு லைவில் பேசிக்கொண்டிருப்பதை மறந்து கெட்ட வார்த்தையில் கத்தினார்.

Rahul

அவர் பயன்படுத்திய அந்த கெட்ட வார்த்தை தொலைக்காட்சியில் தெளிவாக கேட்டது. ராகுலின் இந்த செயல் தற்போது பிரச்சனையாக மாறியுள்ளது. ஐபிஎல் தொடரை குடும்பத்தோடு பார்ப்பவர்கள் உண்டு. பள்ளி விடுமுறை என்பதால் இந்தியா முழுவதும் சிறுவர்கள் ஐபிஎல் போட்டியை பார்க்கும் நிலையில், பொறுப்பில்லாமல் லைவ் டிவியில் கெட்ட வார்த்தை உபயோகித்துள்ளார் ராகுல். 

ஏற்கனவே சில மாதங்களுக்கு முன்பு தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பெண்கள் குறித்து பேசிய ராகுலுக்கு 20 லட்ச ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.


Advertisement