விளையாட்டு

வீடியோ: 6 பந்துகளில் 6 சிக்சர்.. அதிரடி மன்னன் பொல்லார்ட் புதிய சாதனை!

Summary:

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் ஒரே ஓவரில் 6 சிக்சர்கள் விளாசிய வீரர்கள் பட்டியலில் பொல்லார

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் ஒரே ஓவரில் 6 சிக்சர்கள் விளாசிய வீரர்கள் பட்டியலில் பொல்லார்டும் சேர்ந்துள்ளார்.

வெஸ்ட் இண்டீஸிற்கு சுற்றப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி 3 டி20, 3 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இந்த தொடரின் முதல் டி20 போட்டி இன்று நடைபெற்றது.

இதில் முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 139 ரன்கள் எடுத்தது. அடுத்து களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் 4 ஓவர்களிலே 3 விக்கெட்டுகளை இழந்தது.

அடுத்து களமிறங்கிய பொல்லார்ட் இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சாளர் தனஞ்ஜெயா வீசிய ஆறாவது ஓவரில் ஆறு பந்துகளில் 6 சிக்சர்களை விளாசினார் பொல்லார்ட். டி20 போட்டிகளில் யுவராஜ் சிங்கிற்கு அடுத்த பொல்லார்ட் இந்த சாதனையை படைத்துள்ளார்.


Advertisement