பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முக்கிய வீரருக்கு மூன்று ஆண்டுகள் தடை!



Pakistan player banned 3 years

பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் உமர் அக்மலுக்கு அனைத்து  விதமான கிரிக்கெட் போட்டிகளிலிள் இருந்தும் மூன்று ஆண்டுகள் தடை விதித்து அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் உத்தரவிட்டுள்ளது.

பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் உமர் அக்மல், இந்த ஆண்டு நடந்த பாகிஸ் தான் சூப்பர் லீக் (பி.எஸ்.எல்.) தொட ரின் போது சூதாட்டத்தரகர்கள் தன்னை அணுகியதை கிரிக்கெட் வாரியத்திடம் தெரிவிக்காமல் மறைத்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்தநிலையில் அவர் மீது இரண்டு பிரிவுகளில் ஊழல் தடுப்பு பிரிவு குற்றச்சாட்டை பதிவு செய்தது. இது குறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் ஒழுங்கு நடவடிக்கை குழு விசாரணை நடத்தியது. அவருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. 

Pakistan

இந்த நிலையில் உமர் அக்மலுக்கு அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளிலும் விளையாட 3 ஆண்டு காலம் தடை விதித்து ஒழுங்கு நடவடிக்கை குழு தலைவர் பைசல் இ மிரான் சவுகான் நேற்று உத்தரவிட்டார்.