நினைவில் கொள்ள வேண்டிய ஆட்டம்.! யார்க்கர் மன்னன் சேலத்து நடராஜன் என்ன கூறியுள்ளார் பார்த்தீர்களா.?

நினைவில் கொள்ள வேண்டிய ஆட்டம்.! யார்க்கர் மன்னன் சேலத்து நடராஜன் என்ன கூறியுள்ளார் பார்த்தீர்களா.?


ntarajan talk about last match

ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி ஒருநாள், T20 மற்றும் டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது. முதலில் 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் 2-1 என்ற கணக்கில் ஒருநாள் தொடரை கைப்பற்றியது ஆஸ்திரேலிய அணி. 

இதனையடுத்து T20 முதல் போட்டியில் இந்திய அணியின் தமிழக வீரர் நடராஜன், சாஹலின் அருமையான பந்துவீச்சு, கே.எல்.ராகுல், ஜடேஜாவின் அதிரடியான பேட்டிங் ஆகியவற்றால் கான்பெரேராவில் நடைபெற்ற முதலாவது டி20 போட்டியில் 11 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபாரமாக வெற்றி பெற்றது.


ஆஸ்திரேலியாவிற்கு எதிரான மூன்றாவது ஒருநாள் மற்றும் முதல் T20 போட்டியில் தமிழக வீரர் நடராஜன் ஆடிய விதம் பலரையும் கவர்ந்து உள்ளது. இந்திய அணியில் ஒருநாள் மற்றும் T20யில் அறிமுக போட்டியிலேயே முறையே 2 மற்றும் 3 விக்கெட்டுகளை நடராஜன் வீழ்த்தி அசத்தி உள்ளார். இந்த நிலையில் சிறப்பாக விளையாடியது குறித்து நடராஜன் தனது ட்விட்டர் பக்கத்தில், "நினைவில் கொள்ள வேண்டிய ஆட்டம் ,முன்னும், பின்னும்” என்று பதிவிட்டுள்ளார். நடராஜனின் பதிவுக்கு ஏராளமான ரசிகர்கள் வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.