ஐபிஎல் வரலாற்றில் இடம்பிடித்த ஷான் கரண்.! நேற்று நடத்திய சாதனை!
2019 ஐபிஎல் தொடரின் 13வது லீக் போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும் , டெல்லி கேபிடல்ஸ் அணியும் ஆடியது. இந்த போட்டியில் ‘டாஸ்’ வென்ற டெல்லி கேபிடல்ஸ் அணி கேப்டன் ஸ்ரெயாஸ் ஐயர் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
பஞ்சாப் அணியில் கிறிஸ் கெயில் இல்லாத நிலையில், ராகுலுடன், சாம் கர்ரன் துவக்க மட்டையாளராக களமிறங்கினார். இதையடுத்து களமிறங்கிய பஞ்சாப் அணி 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 166 ரன்கள் எடுத்தது.
167 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய டெல்லி அணி ஆரம்பத்தில் சிறப்பாக ஆடியது. இந்தப் போட்டியில் ஒரு கட்டத்தில் டெல்லி அணி எளிதாக வெல்லும் என்ற நிலை இருந்தது. ஆனால், மிகவும் மட்டமான பேட்டிங்கால் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி, டெல்லி கேபிடல்ஸ் அணியை 14 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
நேற்று நடந்த டெல்லி அணிக்கு எதிரான ஐபிஎல் தொடரின் லீக் போட்டியில், ஷாம் கரண் ஹாட்ரிக் விக்கெட் கைப்பற்றினார். இதன் மூலம் ஐபிஎல் வரலாற்றில் ஹாட்ரிக் விக்கெட் கைப்பற்றிய வீரர்கள் பட்டியலில் ஷாம் கரண் நுழைந்தார்.
இதன் மூலம் இந்த ஆண்டு ஐபிஎல், அரங்கில் ஹாட்ரிக் விக்கெட் கைப்பற்றிய முதல் பவுலர் என்ற பெருமை பெற்றார் ஷாம் கரண். மேலும், ஐபிஎல் அரங்கில் ஹாட்ரிக் விக்கெட் கைப்பற்றிய 18வது வீரரானார் ஷாம் கரண்.