
முகமது ஷமிக்கு எழும்பு முறிவு ஏற்பட்டுள்ளதால் மீதமுள்ள டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
இந்திய அணி ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வரும் முதல் டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. 90 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இரண்டாவது இன்னிங்ஸில் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி, 2 விக்கெட் இழப்பிற்கு 93 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.
முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸ் 21.2ஆவது ஓவரில், பேட் கம்மின்ஸ் வீசிய பவுன்சரை வேகப்பந்து வீகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி, சரியாகக் கணிக்காததால் வலது கைப் பகுதியில் அடிபட்டது. இதனால், அவர் தொடர்ந்து பேட்டிங் செய்யாமல் வெளியேறினார். இதனையடுத்து ஷமிக்கு செய்த மருத்துவ பரிசோதனையில், அவரது வலது கை பகுதியில் எழும்பு முறிவு ஏற்பட்டது தெரிய வந்தது.
இந்தநிலையில், முகமது ஷமி மீதமுள்ள மூன்று டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்க முடியாத சூழ்நிலை உருவாகியுள்ளது. ஷமிக்கு மாற்று வீரராகத் தமிழகத்தைச் சேர்த்த நடராஜன் அறிவிக்கப்பட வாய்ப்புள்ளதாக பேசப்பட்டு வருகிறது. ஆனாலும், பயிற்சி டெஸ்டில் சிறப்பாகப் பந்துவீசிய நவ்தீப் சைனி அணியில் இடம்பெறக் கூடும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
Advertisement
Advertisement