பழம்பெரும் நடிகை சரோஜா தேவி 87 வயதில் காலமானார்! அவரது சினிமா வெற்றி பயணத்தின் ஒரு பார்வை!
மைதானத்தில் முத்தையா முரளிதரனுக்கு திடீர் மாரடைப்பு..! சென்னை மருத்துவமனையில் அனுமதி.!

நேற்று நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முத்தையா முரளிதரனுக்கு ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
தற்போது விறுவிறுப்பாக நடைபெற்றுவரும் ஐபிஎல் தொடரில் விளையாடி வரும் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் பயிற்சி வீரராக இருந்துவரும் முன்னாள் வீரர் முத்தையா முரளிதரன், நேற்று பயிற்சியில் ஈடுபட்டு கொண்டிருந்துள்ளார். அப்போது முத்தையா முரளிதரனுக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து அவசரமாக மீட்டு அவரை மருத்துவமனையில் அனுமதித்தனர். மருத்துவர்களை அவரை பரிசோதித்ததில் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது தெரியவந்தது. அவருக்கு எடுக்கப்பட்ட ஸ்கேனில் அவரின் ரத்த குழாயில் அடைப்பு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து நேற்று இவருக்கு ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இதனையடுத்து தற்போது அவர் மருத்துவமனையில் ஓய்வு எடுத்து வருகிறார். ஐபிஎல் தொடரின் மீதமுள்ள போட்டிகளில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு இவர் பயிற்சி வழங்குவது சந்தேகம்தான் என கூறப்படுகிறது.