இந்தியா விளையாட்டு

டோனிக்கு பாடம் சொல்லிக்கொடுக்கும் டோனியின் மகள்!. உற்சாகப்படுத்தும் வைரல் வீடியோ!.

Summary:

ms Dhoni's daugter teach him

இந்திய அணியின் முன்னாள் கேப்டனுமான, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தற்போதைய கேப்டனுமான டோனி தனது மனைவி மற்றும் மகளுடன் வெளியில் செல்வது, நேரம் செலவிடுவது ஆகியவற்றை புகைப்படங்கள், வீடியோக்களாக பதிவிடுவது வழக்கம்.

கடந்த வாரம் டோனிக்கு அவரது மகள் ஸிவா தமிழ் கற்றுக் கொடுக்கும் வீடியோ ஒன்று வைரலானது. இந்நிலையில், ஸிவா தனது தந்தை டோனிக்கு நடனம் ஆட கற்றுக் கொடுக்கும் வீடியோவை டோனி வெளியிட்டுள்ளார்.


இந்த வீடியோவில் மகள் ஸிவா ஆடும் நடன அசைவுகளை கவனித்துக் கொண்டே டோனி ஆடுகிறார். தன்னைப் போல் ஆடுகிறாரா என டோனியை அவரது மகள் கண்காணிக்கிறார்.

தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பல லைக்குகளை குவித்துவருகிறது.  பலரும் தங்களது கருத்துக்களை இந்த வீடியோவுக்கு பதிவு செய்து வருகின்றனர்.


Advertisement