ஜடேஜா கேப்டன் பதவியில் இருந்து விலகியது ஏன்.? முதல் முறையாக பேசிய தோனி.!

ஜடேஜா கேப்டன் பதவியில் இருந்து விலகியது ஏன்.? முதல் முறையாக பேசிய தோனி.!


ms dhoni talk about jadeja

நடப்பு ஐபிஎல் தொடரில் சென்னை அணியின் கேப்டனாக ஜடேஜா நியமனம் செய்யப்பட்டார். ஆனால், சென்னை அணி தொடரின் துவக்கத்தில் இருந்து கடும் தடுமாற்றம் கண்டது.  முதல் 8 போட்டிகளில் 6-ல் தோல்வி, 2-ல் மட்டுமே வெற்றி அடைந்தது. சென்னை அணி அடுத்தடுத்து தோல்விகளை சந்தித்த நிலையில், திடீரெனெ  ஜடேஜா கேப்டன் பொறுப்பில் இருந்து விலகினார்.

இதன் காரணமாக தோனி மீண்டும் கேப்டன் பதவியை ஏற்றார். நேற்று நடந்த சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில், தோனி தலைமையிலான சென்னை அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. போட்டி முடிந்ததும் பேசிய தோனி, அணித்தலைமையை பொறுத்தவரை, இந்த சீசனில் ஜடேஜா தலைமை வகிப்பார் என்று கடந்த ஆண்டே நினைத்தேன். முதல் இரண்டு போட்டிகளில் நான் மேற்பார்வை செய்தேன், அதன் பின்னர் நீங்களே பார்த்துக் கொள்ளுங்கள், நீங்கள் தான் பொறுப்பேற்று முடிவுகளை எடுக்க வேண்டும் என்று அவரிடம் கூறி விட்டேன்.

ஆனால் போட்டிகள் செல்ல செல்ல அவருக்கு அழுத்தம் அதிகரித்து, ஆட்டத்தில் கவனம் செலுத்த முடியாமல் போனது. அதனால் அவரது மனமும் சோர்வடைந்ததால் ஜடேஜா விலகினார் என தெரிவித்துள்ளார்.