இந்தியா விளையாட்டு

உலக கோப்பையில் ஜாம்போவான் கீப்பர் தோனியை பீல்டர் ஆக்கிய இந்திய அணி! ஷாக் ஆகிய ரசிகர்கள்!

Summary:

MS Dhoni new place

உலகக் கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடர் இந்த மாதம் 30 ஆம் தேதி இங்கிலாந்தில் தொடங்குகிறது. இப்போட்டியில் 10 அணிகள் பங்கேற்கிறது.  இதனால் இந்தத் தொடரில் பங்கேற்கவுள்ள வீரர்கள் இங்கிலாந்து சென்றுள்ளனர். இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள 10 அணிகளும், பயிற்சி ஆட்டத்தில் ஈடுபட்டு வருகிறது.


நேற்று லண்டன், ஓவல் மைதானத்தில் நடந்த உலகக்கோப்பை பயிற்சி போட்டியில் நியூசிலாந்து மற்றும் இந்திய அணி மோதியது. ஆனால் அந்த ஆட்டத்தில் இந்திய அணி தோல்வியடைந்தது. முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி வெறும் 179 ஓட்டங்கள் மட்டுமே  எடுத்தது. 

ms dhoni sad க்கான பட முடிவு

இதனையடுத்து, இந்திய அணி நியூசிலாந்து அணியினை எதிர்த்து ஆடியது. அதில் பந்து வீசிய இந்திய அணி சற்று சொதப்பியபடி ஆடியது. இந்த நிலையில், இந்திய அணி பந்துவீச்சின்போது தோனி சற்று ஓய்வெடுத்தார். அந்த சமயத்தில் தோனிக்கு பதில் இந்திய அணியின் விக்கெட் கீப்பராக தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் செயல்பட்டார். 

ஆனாலும் பின்னர், களமிறங்கிய தோனி  பவுண்டரி கோட்டிற்கு அருகே பீல்டிங் செய்தார். இதை பார்த்த ரசிகர்கள் விசில் அடித்து வரவேர்த்தனர். நீண்ட நாட்களுக்கு பிறகு தோனியை பீல்டராக பார்த்த ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
 


Advertisement