விளையாட்டு

இப்படி ஆயிடுச்சே!! ஈஸியான ஸ்கோர்.!! செய்ச்சுருக்கவேண்டிய மேட்ச்.!! 10 ரன் வித்தியாசத்தில் மும்பை அணியிடம் தோற்றது கொல்கத்தா..

Summary:

மும்பை கொல்கத்தா அணிகளுக்கு இடையே நடைபெற்ற போட்டியில் மும்பை அணி 10 ரன்கள் வித்தியாசத்தில்

மும்பை கொல்கத்தா அணிகளுக்கு இடையே நடைபெற்ற போட்டியில் மும்பை அணி 10 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ஐபில் சீசன் 14 T20 நேற்றைய போட்டியில் மும்பை மற்றும் கொல்கத்தா அணிகள் மோதின.  டாஸ் வென்ற கொல்கத்தா அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. இதனை அடுத்து களமிறங்கிய மும்பை அணி வீரர்கள் சற்று நிதானமாக ஆடினர்.

அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா 32 பந்துகளில் 43 ரன்களும், சூர்யா குமார் யாதவ் 36 பந்துகளில் 56 ரன்களும் அடித்தனர். இறுதியில் மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 152 ரன்கள் அடித்தது. 153 என்ற எளிதான இலக்குடன் களமிறங்கிய கொல்கத்தா அணி வீரர்கள் சற்று நிதானமாக ஆடி ரன் சேர்த்தனர்.

ஓப்பனிங் இறங்கிய நிதிஷ் ராணா 47 பந்துகளில் 57 ரன்களும், சுப்மன் கில் 24 பந்துகளில் 33 ரன்களும் அடித்தனர். ஒரு கட்டத்தில் கொல்கத்தா அணி வெற்றிபெற அதிக வாய்ப்புகள் இருந்தும், அடுத்தடுத்து வந்த அனைத்து வீரர்களும் ஒற்றை இழக்க ரன்களில் ஆட்டம் இழந்தனர்.

கடைசி ஆட்டத்தில் மிக அதிரடியாக விளையாடிய தினேஷ் கார்த்திக்கும் இந்த போட்டியில் 11 பந்துகளில் 8 ரன்கள் மட்டுமே அடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தார். இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் கொல்கத்தா அணி 7 விக்கெட்டுகளை இழந்து 142 ரன்கள் மட்டுமே அடித்தது. இதன்மூலம் மும்பை அணி 10 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று ஐபில் சீசன் 14 இல் தனது முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது. 


Advertisement