இன்றுதான் தோனி விளையாடும் கடைசி ஐபில் போட்டியா? மிஸ் பண்ணிடாம பாருங்க! பெரும் சோகத்தில் ரசிகர்கள்

இன்றுதான் தோனி விளையாடும் கடைசி ஐபில் போட்டியா? மிஸ் பண்ணிடாம பாருங்க! பெரும் சோகத்தில் ரசிகர்கள்


May be today is the last IPL match for Dhoni

சென்னை அணியின் கேப்டன் தோனியிடம் இளம்வீரர்கள் டி-ஷர்ட்டை பரிசாக வாங்கும் காட்சிகள் தோனி ரசிகர்கள் மத்தியில் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்துவரும் ஐபில் 13 வது சீசனில் சென்னை அணி கடும் ஏமாற்றை கொடுத்துள்ளது. இதுவரை ஒருமுறை கூட முதல் சுற்று போட்டியில் இருந்து வெளியேறாத சென்னை அணி இந்த முறை தொடர் தோல்விகளால் முதல் சுற்று போட்டியில் இருந்து வெளியேறியுள்ளது.

சென்னை அணியின் இந்த மோசமான ஆட்டத்திற்கு காரணம் அணியில் இருக்கும் மூத்த வீரர்கள்தான் எனவும், இளைஞர்களுக்கு வாய்ப்பு கொடுக்கவேண்டும் எனவும் சென்னை அணிக்கு எதிராக விமர்சனங்கள் எழுந்தது. மேலும் அணியின் கேப்டன் தோனியின் சொதப்பலான ஆட்டமும் பெரும் விமர்சனத்துக்குள்ளானது.

ipl

இதனால் அடுத்த வருடம் சென்னை அணியில் வயதான வீரர்களை தூக்கிவிட்டு, இலைக்கு வீரர்களை சேர்க்க அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. மேலும் அடுத்த வருட ஐபில் போட்டியில் தோனி விளையாடுவாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

ஏற்கனவே ஒவ்வொரு போட்டியின் முடிவிலும் இளம் வீரர்கள் தோனியிடம் வந்து ஆட்டோகிராஃப் இட்ட டி-ஷர்ட்டை பரிசாக வாங்கி செல்கின்றனர். முதலில் பட்லர், அடுத்து ஹர்திக் பாண்ட்யா, குர்ணல் பாண்ட்யா போன்ற வீரர்கள் வாங்கினார்கள். அவர்களை அடுத்து கொல்கத்தா அணி வீரர்களான நிதிஷ் ரானா, வருண் சக்கரவர்த்தி, குல்தீப் யாதவ் உள்ளிட்ட வீரர்கள் தோனியின் டி-ஷர்ட்டை பரிசாக வாங்கினர். 

இது ஒருபுறம் இருக்க, சென்னை அணி வீரர் ஜடேஜாவும் தோனியின் டி-ஷர்ட்டில் ஆட்டோகிராஃப் வாங்கினார். இதெல்லாம் வைத்து பார்க்கும்போது ஒருவேளை இந்த ஐபிஎல் சீசனுடன் தோனி ஓய்வு பெற போகிறாரா? என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

ipl

ஆனால், தோனி அடுத்த ஆண்டும் சென்னை அணியை கேப்டனாக இருந்து வழி நடத்துவார் என சென்னை அணி நிர்வாகம் ஏற்கனவே தெரிவித்திருந்தாலும், தோனி ஏற்கனவே சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து சமீபத்தில் ஓய்வு பெற்றதால் ஐபில் போட்டியில் இருந்தும் வெளியேறிவிடுவாரோ என்ற சோகம் ரசிகர்கள் மத்தியில் அதிகமாகவே உள்ளது.

இந்நிலையில் இந்த சீஸனின் தனது கடைசி போட்டியில் சென்னை அணி இன்று பஞ்சாப் அணியுடன் மோதுகிறது. ஒருவேளை தோனி அடுத்த ஆண்டு ஐபில் போட்டியில் இருந்து ஓய்வு பெரும் பட்சத்தில் அவர் விளையாடும் கடைசி ஐபில் போட்டி இதுவாகத்தான் இருக்கும்.