நடிகர் அரவிந்த் சாமியின் அப்பா யார் தெரியுமா? பலரும் அறியாத உண்மை!
காதல் வார்த்தைகளை பேசி ஏமாற்றிய மாதம்பட்டி ரங்கராஜ்! ரகசிய காணொளியை வெளியிட்ட ஜாய் கிரிஸில்டா....
தமிழகத்தில் பிரபலமான சமையல் கலைஞரும், சினிமா நடிகருமான மாதம்பட்டி ரங்கராஜ் மீது அவரின் இரண்டாவது மனைவி போலீசில் அளித்த புகார் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. ஜாய் கிரிஸில்டா பகிர்ந்த காணொளி சமூக வலைதளங்களில் தீவிரமாக பரவி வருகின்றது.
புகாரின் பின்னணி
மாதம்பட்டி ரங்கராஜ் தன்னை ஏமாற்றி கர்ப்பமாக்கி விட்டதாகவும், பின்னர் கருக்கலைப்பு செய்ய தூண்டியதாகவும் அவரது இரண்டாவது மனைவி ஜாய் கிரிஸில்டா போலீசில் புகார் அளித்துள்ளார். இது ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சமூக வலைதளத்தில் வைரல்
"தன் குழந்தையை சுமந்த பெண்ணை காட்டிக்கொடுக்கும் ஆண் யாரையும் காட்டிக்கொடுப்பான்" என்று ஜாய் கிரிஸில்டா குறிப்பிட்டுள்ள வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த காணொளி பலரும் பகிர்ந்து வருகின்றனர்.
இதையும் படிங்க: மனசே வலிக்குது.... கதறி அழுது வீடியோ வெளியிட்ட நடிகை சதா! இதெல்லாம் எதற்காகன்னு பாருங்க!
ரங்கராஜின் புகழ்
தமிழகத்தில் சமையல் கலைஞராக பெரும் புகழ் பெற்றவர் மாதம்பட்டி ரங்கராஜ். அவரின் சமையலை ரசிக்க ஒரு பெரிய ரசிகர் பட்டாளம் உள்ளது. மேலும், அவர் "மெஹந்தி சர்க்கஸ்" திரைப்படத்தில் கதாநாயகராகவும் நடித்துள்ளார். ஆனால் அந்த திரைப்படம் பெரிய வெற்றியை பெறவில்லை.
திருமண விவகார சர்ச்சை
முதல் மனைவி ஸ்ருதியுடன் வாழ்ந்தபோதும், ஜாய் கிரிஸில்டாவை திருமணம் செய்து கொண்டார் என்ற புகைப்படங்கள் வெளியானதால் சர்ச்சை அதிகரித்தது. இதற்கிடையில், அவர் மீண்டும் தனது முதல் மனைவியுடன் கலந்து கொண்ட புகைப்படங்கள் வெளியாகி குழப்பத்தை ஏற்படுத்தியது.
இந்நிலையில், ஜாய் கிரிஸில்டாவின் போலீஸ் புகார் மற்றும் இணையத்தில் பரவி வரும் வீடியோ காரணமாக, மாதம்பட்டி ரங்கராஜ் குடும்ப மற்றும் தனிப்பட்ட வாழ்க்கை மீண்டும் பேசுபொருளாகியுள்ளது.
இதையும் படிங்க: அப்படியே வடிவேலு மாறியே இருக்கே! ரெடின் கிங்ஸ்லி மனைவியின் காமெடி வீடியோ! இணையத்தில் வைராலாகும் காணொளி...