என்ன ஒரு அட்டகாசமான கேட்ச்.. சீறிப்பாயும் மனிஷ் பாண்டேவின் வைரல் வீடியோ!

என்ன ஒரு அட்டகாசமான கேட்ச்.. சீறிப்பாயும் மனிஷ் பாண்டேவின் வைரல் வீடியோ!


Manish pandey brilliant catch against MI

ஐபிஎல் தொடரில் இன்று நடந்து முடிந்த மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையேயான போட்டியில் மனீஷ் பாண்டே ஒரு அட்டகாசமான கேட்ச் பிடித்துள்ளார்.

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 208 ரன்கள் எடுத்தது. சன்ரைசர்ஸ் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 174 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை தழுவியது.

இந்த போட்டியில் சன்ரைசர்ஸ் அணியின் சந்தீப் சர்மா வீசிய 15 ஆவது ஓவரின் கடைசி பந்தில் மும்பை அணியின் இஷான் கிஷான் நேர் திசையில் தூக்கி அடித்தார். சற்று தொலைவில் பீல்டிங் செய்துகொண்டிருந்த மனீஷ் பாண்டே ஓடிவந்து சீறிப்பாய்ந்து கேட்ச் பிடித்தார்.