இந்தியா விளையாட்டு

தோனிக்கு வயதாகிவிட்டதா என்ன! விளையாடுறீங்களா? விளாசும் டிவில்லியர்ஸ்.

Summary:

mahendra sing dohni - ab divillers

இந்திய அணியின் வீரர் மகேந்திர சிங் தோனியின் பேட்டிங் குறித்து பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில் தென் ஆப்பிரிக்காவின் அதிரடி ஆட்டக்காரர்  டிவில்லியர்ஸ் விமர்சனங்களுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.

தனது அதிரடி ஆட்டத்தின் மூலம் இந்திய அணியில் இடம் பிடித்து கேப்டனாக உயர்ந்தவர் மகேந்திர சிங் தோனி. இவரது தலைமையின் கீழ் இந்திய அணி ஒருநாள் மற்றும் T-20  உலக கோப்பைகளை வென்றது குறிப்பிடத்தக்கது. தற்சமயம் இந்திய அணியில் சாதாரண வீரராக இடம் பெற்றுள்ளார்.

Image result for dhoni

ஏற்கனவே டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற தோனி தற்சமயம் ஒருநாள் போட்டிகளில் விளையாடி வருகிறார். கடைசியாக பங்கேற்ற 9 ஒருநாள் போட்டிகளில் வெறும்  156 ரன்கள் எடுத்துள்ளார். இதனால் அவரது பேட்டிங் குறித்து பல்வேறு விமர்சனங்களும் அவர் ஓய்வு பெறும் நேரம் வந்துவிட்டதாகவும்  பல்வேறு தரப்பினரிடமிருந்து கருத்து தெரிவிக்கப்பட்டு வருகிறது. 

2019 உலகக்கோப்பை நெருங்கும் வேளையில் தோனியை ஒருநாள் போட்டியில் இருந்து விலக்க வேண்டும் என்பதாகவே டெஸ்ட் போட்டியில் இருந்து தற்போது ஒருநாள் போட்டிகளிலும் ரிஷபன்ட் சேர்க்கப்பட்டுள்ளார் என்பதாக தோன்றுகிறது. இந்த நிலையில் தென் ஆப்பிரிக்க அணியின் அதிரடி ஆட்டக்காரர் டிவிலியர்ஷிடெம் தோனி குறித்து கேட்கப்பட்டபோது.

Image result for dhoni

என்ன விளையாடுகிறீர்களா? தோனி 80 வயதாகி, சக்கர நாற்காலியில் இருந்தாலும் என் அணியில் இருப்பார். மேலும், தோனியின் சாதனைகளை பாருங்கள் ஒரு அணியில் இருந்து இப்படி ஒரு வீரரை நீக்குவதை எதிர்பார்க்க முடியுமா? நானாக இருந்தால் அவரை நீக்க மாட்டேன் என அதிரடியாக பதில் அளித்தார்.


 


Advertisement