என்ன ராகுல் இதெல்லாம்..! 3 மேட்ச்ல இவரோட மொத்த ஸ்கோரே 1 தான்.. அதுவும் நேற்று எப்படி அவுட் ஆனார் பாருங்க.. வைரல் வீடியோ..

என்ன ராகுல் இதெல்லாம்..! 3 மேட்ச்ல இவரோட மொத்த ஸ்கோரே 1 தான்.. அதுவும் நேற்று எப்படி அவுட் ஆனார் பாருங்க.. வைரல் வீடியோ..


KL Rahul 3 times dock out against to England T20 match

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதிய மூன்றாவது T20 போட்டியில் இந்திய அணி வீரர் KL ராகுல் போல்டாகி வெளியேறிய வீடியோ தற்போது வைரலாகிவருகிறது.

இந்தியா - இங்கிலாந்து அணிகள் தற்போது T20 போட்டியில் விளையாடிவருகிறது. முதல் போட்டியில் இங்கிலாந்து அணியும், இரண்டாவது போட்டியில் இந்திய அணியும் வெற்றிபெற்றநிலையில் நேற்று நடந்த மூன்றாவது T20 போட்டியில் இங்கிலாந்து அணி மீண்டும் வெற்றிபெற்று 5 போட்டிகள் கொண்ட தொடரில் 2 -1 என்ற நிலையில் முன்னிலையில் உள்ளது இங்கிலாந்து அணி.

இந்நிலையில் இந்த தொடரில் இந்திய அணி வீரர் KL ராகுலின் மோசமான ஆட்டம் குறித்து ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கடும் அதிருப்தி தெரிவித்துவருகின்றனர். இதுவரை நடந்த முயன்று போட்டிகளிலும் சேர்த்து KL ராகுல் 1 ரன் மட்டுமே எடுத்துள்ளார்.

முதல் போட்டியில் KL ராகுல் 1 ரன் எடுத்த நிலையில், அடுத்த விளையாடிய இரண்டு போட்டிகளிலும் டக்கவுட் ஆகி ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை கொடுத்துள்ளார். அதிலும் நேற்றைய போட்டியில் இங்கிலாந்து பந்துவீச்சாளர் மார்க் வுட் வீசிய ஓவரில் போல்டாகி வெளியேறிய வீடியோ காட்சி தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகிவருகிறது.