ஒரு வருசமா தூங்கல... வாழ்க்கையை மாற்றியது இந்த போட்டிதான்.! முதன் முறையாக ரவீந்திர ஜடேஜா பகிர்ந்த தகவல்.!

ஒரு வருசமா தூங்கல... வாழ்க்கையை மாற்றியது இந்த போட்டிதான்.! முதன் முறையாக ரவீந்திர ஜடேஜா பகிர்ந்த தகவல்.!


jadeja talk about old experience

உலக டெஸ்ட் சாம்பியன்சிப் இறுதி போட்டி இங்கிலாந்தின் லார்ட்ஸ் மைதானத்தில் ஜூன் 18ம் தேதியில் இருந்து 22ம் தேதி வரை நடைபெற உள்ளது. டெஸ்ட் போட்டிகளுக்கான புள்ளி பட்டியலில் முதல் இரண்டு இடத்தில் இருக்கும் நியூசிலாந்து மற்றும் இந்திய அணிகள் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளன. இந்த போட்டிக்காக இந்திய வீரர்கள் தீவிரமாக தயாராகி வருகின்றனர்.

இந்த தொடர் குறித்து எடுக்கப்பட்ட பேட்டியில் ரவீந்திர ஜடேஜா தன் வாழ்நாளில் கிட்டத்தட்ட ஒன்றரை ஆண்டுகள் சரியாக தூங்காமல் கவலைப்பட்டு கொண்டே இருந்தேன் எனத்தெரிவித்துள்ளார். ஜடேஜா கூறுகையில், 2018ஆம் ஆண்டு எனக்குச் சோதனையான வருடம். கிட்டதட்ட ஒரு ஆண்டுக்கு மேல் என்னால் தூங்கக் கூட முடியவில்லை. 4-5 மணி வரை விழித்திருந்து, மீண்டும் அணியில் இடம் பிடிக்க வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும்? என்பது குறித்து யோசித்துக்கொண்டிருப்பேன்.

jadeja

படுத்தாலும் தூக்கம் வராது. அந்த காலகட்டத்தில் டெஸ்ட், ஒருநாள் அணிகளில் இடம்பெற்றாலும், XI அணியில் வாய்ப்பு கிடைக்காது. இதனால், உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளிலும் பங்கேற்க முடியால்போனது. இந்திய அணியில் எனது திறமையை நிரூபிக்க வாய்ப்பும் கிடைக்கவில்லை. 2018-ஆம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்ற ஒரு டெஸ்ட் போட்டி தான் என்னுடைய வாழ்க்கையே திருப்பிய ஒரு போட்டி. 

ஏனெனில் அந்த போட்டியில் இங்கிலாந்து சூழ்நிலையை சமாளித்து உலகின் மிகச்சிறந்த பவுலிங் அட்டாக்கிற்கு எதிராக நான் ரன்களை அடித்ததும் என்னால் உலகின் எந்த ஒரு மைதானத்திலும் ரன் அடிக்க முடியும் என்ற நம்பிக்கை எனக்குள் வந்தது. தொடர்ந்து உலகக் கோப்பை தொடரிலும் சிறப்பாகச் செயல்பட்டேன். ஹார்திக் பாண்டியா காயத்தால் அவதிப்பட்டதால் ஒருநாள் போட்டியிலும் விளையாட வாய்ப்பு கிடைத்தது. தற்போது மூன்றுவிதமான கிரிக்கெட்டில் விளையாடி வருகிறேன் என ஜடேஜா தெரிவித்துள்ளார்.